கட்டா குஸ்தி 2-வில் விஜய் - திரிஷா ரெஃபரன்ஸ்-ஆ!! கலாய்க்கும் நெட்டிசன்கள்..
கட்டா குஸ்தி 2
இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி, மோக்ஷா உள்ளிட்ட பல நடித்து வெளியான படம் தான் கட்டா குஸ்தி 2. படம் ரிலீஸாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வரும் நிலையில் படத்தின் ஒரு காட்சி தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது.
படத்தின் நடுப்பகுதியில் வரும் ஒரு காட்சியொல் விஷ்ணு விஷால், மீனு மிஸ் ரோலில் நடித்துள்ள நடிகை மோக்ஷாவை தூக்கிக்கொண்டு வரும் காட்சியில் விஜய்யின் சூப்பர் ஹிட் படமான கில்லி படத்தின் அப்படி போடு பாடல் ஒலிக்கிறது.

விஜய் - திரிஷா ரெஃபரன்ஸ்
இக்காட்சி வரும்போது திரையரங்கில் ரசிகர்கள் ஆரவாரம் செய்திருந்தாலும் வேறு கோணத்தில் அதை விவாதிக்கவும் வைத்திருக்கிறது.
மோக்ஷா அணிந்திருந்த புடனை, சில மாதங்களுக்கு முன் நடந்த திருமண நிகழ்ச்சியில் நடிகை திரிஷா அணிந்த சேலையை போல் இருக்கிறது என்றும் விஜய் பாடலை வைத்து மறைமுக ரெஃபரன்ஸ் என்றும் நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர். படத்தின் பிரமோஷனுக்காக இந்த காட்சியை வைத்திருக்கலாம் என்று ஒருசிலர் கூறி வருகிறார்கள்.
Just watched Gatta Kusthi 2 in theatres, total fun! Especially indha scene... Aishwarya was too cute! Yaaravadhu paakama irundha, kandipa poi parunga! #GattaKusthi2 pic.twitter.com/gVmLwgXmFc
— JUDE 🇵🇹 (@7ARDAGULE) July 3, 2026