கனவில் கோட்டை கட்டும் வெண்பாவுக்கு ஆப்பு வைத்த கண்ணம்மா.. சீக்கிரம் இழுத்து மூட துடிக்கும் பாரதி..

Bharathi Kannamma Star Vijay Serials
By Edward Oct 29, 2022 04:00 PM GMT
Report
140 Shares

விஜய் தொலைக்காட்சி சேனலில் பல சீரியல்கள் ரசிகர்களை ஈர்த்து வருவதைவிட வெறுப்பை ஏற்றும் சீரியல்களாக மாறி வருகிறது. அப்படி எந்தவொரு லாஜிக்கும் இல்லாமல் இயக்குனர்கள் சீரியல்களை எடுத்து வருகிறார்.

அந்த லிஸ்ட்டில் பாரதி கண்ணம்மா சீரியலும் அடங்கும். நல்லவள் போல் ரோஹித்தை திருமணம் செய்ய ஒற்றுக்கொள்ளும் வெண்பா கடைசி நேரத்தில் பாரதி தாலிக்கட்ட காத்துக்கொண்டிருக்கிறார். இடையில் டிஎன்ஏ டெஸ்ட்க்காக பாரதி காத்திருக்கிறார். இதற்கு பிளான் போட்ட வெண்பாவின் திட்டத்தை அறிந்து திருமண மண்டபத்திலேயே சாந்தி கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டுகிறார் கண்ணம்மா.

பாரதி ஐயாவை தான் வெண்பா கல்யாணம் செய்யவுள்ளார் என்ற உண்மையை கூறிய சாந்தியால் மண்டம் உட்பட அனைவரும் ஷாக்காகியுள்ளனர். கோயிலுக்கு ரோஹித்துடன் கண்ணம்மா உள்ளிட்டவர்கள் செல்ல, பாரதியும் டி என் ஏ டெஸ்ட் ரிப்போர்ட்டில் தான் தான் அப்பா என்று வெண்பா கழித்தில் தாலியை கட்டாமல் கோபத்தில் திட்டியிருக்கிறார்.

இதன்பின் ரோஹித் வெண்பா கழித்தில் தாலிக்கட்ட சீரியலின் இறுதிக்கு செல்லவுள்ளது. இப்படியாவது ஒருவழியா சீரியலை இழுத்து மூடும் நோக்கில் சென்றாலும் இயக்குனர் எப்படியாவது கதையை மாற்றி வேறு கோணத்தில் செலுத்துவார் என்று நெட்டிசன்கள் புலம்பியும் வருகிறார்கள்.