காந்தாரா 1000 கோடி வசூல் செய்யுமா? பாக்ஸ் ஆபிஸ் விவரம்

Box office Rukmini Vasanth Kantara: Chapter 1
By Kathick Oct 15, 2025 05:30 AM GMT
Report

ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த காந்தாரா சாப்டர் 1 படம் கடந்த அக்டோபர் 2ஆம் தேதி வெளிவந்தது. ரிஷப் ஷெட்டி இப்படத்தை இயக்கி ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

ருக்மிணி வசந்த், ஜெயராம், குல்ஷன் என பலரும் இப்படத்தில் நடித்திருந்தனர். 2022ல் வெளிவந்த காந்தாரா படத்தை விட காந்தாரா சாப்டர் 1 வசூலில் பட்டையை கிளப்பி வருகிறது.

காந்தாரா 1000 கோடி வசூல் செய்யுமா? பாக்ஸ் ஆபிஸ் விவரம் | Kantara Chapter 1 Worldwide Collection

இந்த நிலையில், இப்படத்தின் இதுவரையிலான வசூல் குறித்து பாக்ஸ் ஆபிஸ் விவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, காந்தாரா சாப்டர் 1 உலகளவில் இதுவரை ரூ. 670+ கோடி வசூல் செய்துள்ளது.

13 நாட்களில் உலகளவில் ரூ. 670+ கோடி வசூலை ஈட்டியிருக்கும் இப்படம் ரூ. 1000 கோடி பாக்ஸ் ஆபிஸ் கிளப்பில் இணையுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.