தனுஷ் படகாட்சியை அட்டர் காப்பி அடித்த கன்னட திரைப்படம்!! 150 கோடி வசூலுக்கு முக்கிய காரணமே இதுதான்?
கன்னட திரையுலகில் பொன்னியின் செல்வன் படத்திற்கு போட்டியாக வெளியான படம் காந்தாரா. 18ஆம் நூற்றாண்டு காலத்தில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எடுத்த இப்படம் ஆரம்பத்தில் கன்னட மொழியில் மட்டுமே வெளியாகியது.
அதன்பின் இந்தியளவில் பிரபலங்கள் உள்ளிட்ட பலரால் பாராட்டை பெற்று அனைத்து மொழியிலும் வெளியாகி பட்டையை கிளப்பி வருகிறது. 16 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் 150 கோடிக்கும் மேல் வசூலித்து சாதனை படைத்து வருகிறது.
இந்நிலையில் இப்படத்தின் ஒரு காட்சியில் நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் படத்தின் காட்சியை அப்படியே காப்பி அடித்து வைத்துள்ளனர்.
கர்ணன் படத்தில் முகமூடி அணிந்து ஒரு காட்சிகள் அடங்கியிருக்கும் காட்சியை அப்படியே சாமி ஆடும் காட்சியான இயக்குனர் ரிஷப் செட்டி காந்தாரா படத்தில் அமைத்து வைத்திருக்கிறார்.
பெரும்பாலும் கன்னட படத்தில் எடுக்கப்படும் படங்கள் பல, நம் தமிழ் சினிமாவில் இருந்து சில காட்சிகளை வைப்பது வழக்கமாகி வருகிறது.
கேஜிஎஃப் படத்திற்கு பிறகு காந்தாரா படம் இந்தியளவில் கொண்டாடப்பட வேண்டிய படமாக கருதப்படுகிறடு என்பது குறிப்பிடத்தக்கது.


