சமந்தாவால் நாகர்ஜுனா குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம்!! அதிர்ச்சி கொடுத்த மருத்துவர்..

Samantha Naga Chaitanya Gossip Today Nagarjuna
By Edward Aug 22, 2024 05:30 AM GMT
Report

சமந்தா

நடிகை சமந்தா, நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்துகொண்டார். நட்சத்திர தம்பதிகளாக வலம் வந்த இவர்கள் சில கருத்து வேறுபாடு ஏற்பட்டு சில ஆண்டுகளில் விவாகரத்து செய்தனர். இதனையடுத்து சமந்தா தன்னுடைய சினிமாவில்கவனம் செலுத்த ஆரம்பித்தார். ஆனால் திடீரென்று அவருக்கு மையோசிடிஸ் என்ற அரியவகை நோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டார்.

சமந்தாவால் நாகர்ஜுனா குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம்!! அதிர்ச்சி கொடுத்த மருத்துவர்.. | Kantharaj About Samantha Naga Chaitanya Issue

இந்த சூழலில் நாக சைதன்யா நடிகை சோபிதாவை விரைவில் திருமணம் செய்யவிருக்கிறார். அது தொடர்பான செய்திகள் இணையத்தில் ஹாட் டாபிக்காக சென்று கொண்டு இருக்கிறது.

குடும்பத்திற்குள் குழப்பம்

இந்நிலையில் மருத்துவரும் சினிமா விமர்சகருமான காந்தராஜ் அளித்த பேட்டியொன்றில், சமந்தாவால் நாகர்ஜுனாவின் குடும்பத்தில் குழப்பம் வந்ததாக தெரிவித்துள்ளார். அதில், நாகர்ஜுனாவின் தந்தை, ஏகபத்தினி விரதனாக இருந்தார். ஆனால் நாகர்ஜுனா இரு திருமணங்கள் செய்து கொண்டார்.

சமந்தாவால் நாகர்ஜுனா குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம்!! அதிர்ச்சி கொடுத்த மருத்துவர்.. | Kantharaj About Samantha Naga Chaitanya Issue

நடிகை அமலா, நடிகையாக இருந்தாலும் வீட்டுக்கு வந்தால் மருமகளாக்கத்தான் இருந்தார். திருமணத்துக்கு பின் சமந்தா நடித்துக்கொண்டிருந்த போது அவரது பல படங்கள் வெளியாகி குடும்பத்தினரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதனால் தான் அவர்களது குடும்பத்திற்குள் குழப்பம் வந்தது என காந்தராஜ் தெரிவித்துள்ளார்.