லாக்டவுனில் கணவருடன் படுக்கையறை வீடியோ! கள்ளத்தொடர்பால் நடிகைக்கு ஏற்பட்ட நிலை
பாலிவுட் சினிமாவின் சீரியல்களில் நடித்து பிரபலமானவர்கள் நடிகர் கரண் மெஹ்ரா மற்றும் நடிகை நிஷா ரவால். சீரியலில் ஏற்பட்ட காதலால் இருவரும் திருமணம் செய்து ஒரு மகனும் இருக்கிறார். இந்நிலையில் நடிகை நிஷா ரவால் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கரணுடன் படுக்கையறையில் இருக்கும் வீடியோவை எடிட் செய்து வெளியிட்டுள்ளார்.
அது லாக்டவுன் ஆரம்பித்த 7 வாரங்களுக்கு முன் எடுக்கப்ட்டது என்று கூறியுள்ளார் நிஷா. அதில் ஆரம்பித்த வாழ்க்கை தற்போது இருவர் வாழ்க்கையில் அடித்தடியாக அமைந்து வருகிறது. சில தினங்களுக்கு முன் தன் கணவர் என்னை அடித்து மண்டையை உடைத்துள்ளார் என்று போலிஸில் புகாரளித்தது பரப்பரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நிஷாவின் புகாரின் பேரில் கரணை கைது செய்த அடுத்த நாளே ஜாமினில் வெளியே வந்துள்ளார். இது பற்றி கரண் கூறியது, தான் நிஷாவை அடிக்கவில்லை என்றும் நிஷாவின் சகோதரர் தான் என்னை தாக்கி சென்றார். கோபமாக செல்லும் போது சுவரில் இடித்துக்கொண்டதை காட்டி பொய் புகார் கூறி கைது செய்யவைத்துவிட்டார்கள்.
இதுபற்றி நிஷா ரவால் கூறியது, கரணுக்கும் டெல்லியை சார்ந்த ஒரு பெண்ணிற்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகவும், இதுகுறித்து நான் கேட்ட போது அந்த பெண்ணை காதலிப்பதாகவும் கூறினார். ஆனால் 14 ஆண்டுகால கரணின் நடவடிக்கையில் இது புதிதாக படவில்லை என நினைத்து நடவடிக்கை எடுக்காமல் இருந்தேன்.
மேலும் இதனால் என்னுடைய கரியர் கெட்டுவிடும். என் மகனுக்காகவும் ஒவ்வொருமுறையும் கரன் மன்னிப்பு கேட்கும் போது சரி என்று சொல்லுவிடுவேன். இதை நம்பிய எனக்கு அடிதான் கிடைத்தது என்று கூறியுள்ளார் நிஷா.