ஆண்ட்டியால் காலியானாரா நடிகர் கரண்!! வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரபலம்..
நடிகர் கரண்
தமிழ் சினிமாவில் 90களில் ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், அஜித், பிரசாந்த் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களில் கேரக்டர் ரோலில் நடித்து மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருபவர் நடிகர் கரண்.
ஆரம்பத்தில் முக்கிய ரோலில் நடித்தாலும் கதாநாயகனுக்கு தோழன் உள்ளிட்ட கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். கிடைக்கும் வாய்ப்பை சரியாக பயன்படுத்தி வந்த கரண் 2016க்கும் பின் எந்த படத்திலும் நடிக்காமல் சினிமாவை விட்டு காணாமல் போய்விட்டார்.
இதற்கு ஒரு ஆண்ட்டியின் கட்டுப்பாட்டில் இருந்தது தான் அதற்கு காரணம் என்று கிசுகிசுக்கப்பட்டது.
சோபிதா ஜோசப்
பத்திரிக்கையாளர் சோபிதா ஜோசப் அளித்த பேட்டியில், ஆண்ட்டி என்று கூறப்படுபவர் லட்சுமி என்பவர் தான். அவர்தான் கரணின் கால்ஷீட் உள்ளிட்ட பலர் விஷயங்களை பார்த்து கொண்டிருந்தார். லட்சுமி - கரண் நல்ல நட்பாக இருந்தார்கள். ஒருமுறை என்னை நேரில் சந்திக்க வேண்டும் என்று லட்சுமியிடம் இருந்து பேஜர் மெசேஜ் வந்ததும் மெளனம் ரவி என்னை சந்தித்து லட்சுமி தற்கொலைக்கு முயற்சிக்க போறார், உன்னை தேடிக் கொண்டிருக்கிறார் என்று கூறினார்.
அப்போது லட்சுமி, கரண் சார் முன்புபோல என்னிடம் பேசுவதில்லை அவரிடம் யாரோ சந்தேகத்தை கிளப்பிவிட்டிருக்கிறார்கள். வீட்டில் ஏதாவது சொன்னார்களா? எனக்கு வருத்தமாக இருக்கிறது, தற்கொலை செய்யலாம் போல் இருப்பதாக லட்சுமி தெரிவித்தார்.
அதற்கு நான், உங்கள் தொழில் இதுதான், நடிகருக்கு பெண் மேனேஜராக இருந்தால் இப்படியான பேச்சுக்கள் வரத்தான் செய்யும், வெளியிலிருந்து பார்க்கும்போது அப்படித்தான் தெரியும். வழக்கமாக உங்கள் வேலையை செய்யுங்கள் என்று நான் சொன்னேன்.
மெளனம் ரவியும் அவருக்கு ஆறுதல் சொன்னப்பின் லட்சுமி நன்றி சொல்லிவிட்டு கிளம்பினார். மற்றபடி கரண் லட்சுமியால் மார்க்கெட் இழந்தார் என்று கூறுவது பொய் என்று சோபிதா ஜோசப் தெரிவித்துள்ளார்.