திருமணத்தை நிறுத்த இதுதான் காரணம்!! வெளிப்படையாக பேசிய நடிகை திரிஷா..

Trisha Gossip Today Marriage
By Edward Mar 11, 2026 01:45 PM GMT
Report

திரிஷா நிச்சயதார்த்தம்

விஜய் - திரிஷா இருவரும் திருமணத்திற்கு ஜோடியாக வந்த விஷயம் பலருக்கு அதிர்ச்சியை கொடுத்த நிலையில், பல பிரபலங்கள் இதுகுறித்து விமர்சித்து பேசி வருகிறார்கள். இதனையடுத்து திரிஷாவுக்கு 2015ல் நடந்த நிச்சயதார்த்தம் நின்று போனது பற்றி திரிஷா கூறிய காரணம் இணையத்தில் பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது.

திருமணத்தை நிறுத்த இதுதான் காரணம்!! வெளிப்படையாக பேசிய நடிகை திரிஷா.. | Trisha Krishnan Called Off Engagement With Varun

திரிஷா, தயாரிப்பாளரும் தொழிலதிபருமான வருண் மணியனுடன் நடந்த நிச்சயதார்த்த புகைப்படங்களை சோசியல் மீடியாக்களில் பதிவிட்டார். அதன்பின் சில மாதம் கழித்து அந்த திருமணம் நடக்காமல் போனதால் அப்புகைப்படங்களை டெலீட் செய்தார் திரிஷா.

இதுதான் காரணம்

அதற்கான என்ன காரணம் என்று கேள்விகள் எழுந்து வந்த நிலையில், நான் மகிழ்ச்சியாக, தனியாக இருக்கிறேன் என்று கூறினார். அதன்பின் ஒரு பேட்டியொன்றில் நடிகை திரிஷா, திருமணம் நின்றுபோனது பற்றி பகிர்ந்துள்ளார்.

திருமணத்தை நிறுத்த இதுதான் காரணம்!! வெளிப்படையாக பேசிய நடிகை திரிஷா.. | Trisha Krishnan Called Off Engagement With Varun

அதில், திருமணம் செய்ய நினைத்த நபர் தன்னுடைய நடிப்பு வாழ்க்கையை நிறுத்த வேண்டும் என்று கேட்டார். ஆனால் சினிமாதான் தன்னுடைய வாழ்க்கை, அதைவிட முடியாது என்று அவரிடம் தெளிவாக கூறியிருந்தேன். நடிப்பை நிறுத்துவதற்கு பதில் அந்த திருமணத்தையே நிறுத்திவிட்டேன் என்று திரிஷா அப்பேட்டியில் கூறியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது.