விமான நிலையத்தில் பிரபல நடிகையிடம் அத்துமீறிய நபர்.. வைரலாகும் வீடியோ
Viral Video
Bollywood
By Edward
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை கரீனா கபூர். 90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக கோடியில் சம்பளம் வாங்கி பிஸியாக இருந்து வந்த நடிகை கரீனா சைஃப் அலிகானை திருமணம் செய்து இரு குழந்தைகளுக்கு தாயாகினார்.
அதன்பின் தற்போது படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். இந்நிலையில், தன்னுடைய அடுத்த படத்தின் படப்பிடிப்பிற்காக லண்டன் செல்ல மும்பை விமான நிலையத்திற்கு வந்தடைந்தார்.
அங்கு ரசிகர்கள் கூடியிருந்தால் பாதுகாவலர்கள் தடுத்தனர். அதைமீறி ஒரு நபர் கரீனா கபூருடன் செல்ஃபி எடுக்க போட்டிப்போட்டு தோல் மீது கை வைக்க முற்பட்டுள்ளார்.
இதனால் ஷாக்கான கரீனா கபூரின் காவலர் தடுத்து அந்த நபரை விலக்கினார். இந்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது.