பிக்பாஸ் நடிகையின் வீட்டில் தற்கொலை செய்து தொழிலதிபர்!! கள்ளக்காதலால் நடந்த மரணம்..
பெங்களூரை சேர்ந்த கார் பணிமனை உரிமையாளரான தொழிலதிபர் வைஷாக்(45) ஏற்கனவே திருமணமாகி மனைவி, மகன் உள்ள நிலையில், அவருக்கும் பிக்பாஸ் நடிகை கிருஷி தாபண்டாவிற்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இதனால் அவர் தன் குடும்பத்தை பிரிந்து வந்தார்.
நடிகை கிருஷியுடன் ஏற்பட்ட மோதல் காரணமாக திரைப்பட தயாரிப்பாளர் அரவிந்த் ரெட்டி என்பவருக்கு கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் வைஷாக் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்று வந்தார்.

சம்பவத்தன்று இரவு கிருஷி படப்பிடிப்பிற்காக நெலமங்களா சென்றிருந்தபோது, வைஷாக் அவருக்கு போன் செய்து தான் தற்கொலை செய்யப்போவதாக கூறியிருக்கிறார்.
அதிர்ச்சியடைந்த நடிகை கிருஷி, அவரை சமாதானப்படுத்திவிட்டு உடனடியாக வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் அதற்குள் வைஷாக் வீட்டில் தூக்கில் பிணமாக தொங்கியுள்ளார்.
கணவர் மரணம் குறித்து விசாரிக்க வேண்டும் என்று மனைவி மேகா காவல் நிலையத்தில் புகாரளித்துள்ளார். ஆனால் அவர் யார் மீதும் சந்தேகம் இருப்பதாக தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார்.