வாயை பிளக்க வைத்த திருமணம்!! 30 ஆயிரம் கோடி சொத்து இந்த நடிகைக்கா?
சினிமா பிரபலங்களின் அறியப்படாத பல தகவல்களை பேட்டி மூலம் பகிர்ந்து வருபவர் மூத்த பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு. சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் 17 வயதில் சினிமாவில் வாய்ப்பு தேட வந்து இன்று 30 ஆயிரம் கோடிக்கு அதிபதியாகியிருக்கும் நடிகையை பற்றி பகிர்ந்துள்ளார்.
கரீஷ்மா கபூர்
2003ல் சஞ்சய் கபூர் என்ற மிகப்பெரிய தொழிலதிபரை திருமணம் செய்து 2வது மனைவியானார் நடிகை கரீஷ்மா கபூர். அம்பானி, அதானி குடும்பத்தின் திருமணத்தைவிடவும் உலகமே வியக்கும் அளவிற்கு திருமணம் நடந்து. இவர்களுக்கு 2 பிள்ளைகள் இருக்கிறார்கள்.
பிசினஸ்களை கரீஷ்மா கபூர் கவனித்து வந்த போது சஞ்சய் போலோ விளையாட்டுக்கு அடிமையாகி இங்கிலாந்து சென்று குடும்பத்தை மறந்தார்.
ஒருமுறை குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத போது டெல்லி மருத்துவமனையில் அனுமதித்தார். அப்போது குழந்தை அப்பா என்று கேட்க, கரீஷ்மா, சஞ்சய்க்கு கால் செய்தும் எடுக்கவில்லை.
விளையாட்டு மேல் அதிக கவனம் செலுத்தியதால் 100 மிஸ்டு கால்கள் வந்தும் எடுக்கவில்லை. இதன்பின் கரீஷ்மாவுக்கு கால் செய்த சஞ்சய், குழந்தை முக்கியமா? விளையாட்டு முக்குயமா என்று அழுது கொண்டே கேட்க, எனக்கு போலோ விளையாட்டு தான் முக்கியம் என்று சொல்ல தகராறு இருவருக்கும் வெடித்துள்ளது.
விவாகரத்து
நீ என்ன சாதாரண குடும்பத்தில் இருந்து வந்த நடிகை தானே நான் பிறக்கும்போதே பணக்காரன் என்று சொல்ல கரீஷ்மா, அவரை விவாகரத்து செய்தார். ஜீவனாம்சமாக ரூ. 70 கோடி, மும்பையில் வீடு, 2 குழந்தைகளுக்கும் படிப்பு செலவுக்கு மாதம் 10 லட்சம் என்று சஞ்சய் ஒதுக்கிவிட்டார்.
இதன்பின் 3வதாக பிரியா என்பவரை
திருமணம் செய்த சஞ்சய், போலோ விளையாட்டில்
தேனி ஒன்று கடித்து மாரடைப்பில் இறந்துள்ளார்.
இப்போது அவரின் 30 ஆயிரம் கோடி சொத்து யாருக்கு
என்பது சிக்கலாக எழுந்துள்ளது. விவாகரத்து நடந்து,
ஜீவனாம்சமும் பெற்றுவிட்டதால், இந்த சொத்து
எதுவுமே கரீஷ்மாவுக்கு கிடையாது என்றாலும் வாரிசு
அடிப்படையில் தந்தை சொத்தில் பங்குள்ளது என்று
கூறப்படுகிறது.