அப்படிபட்ட காட்சிகளில் நானா? கோடி ரூபாய் கொடுத்தாலும் உதறிதள்ளும் நடிகர்..

karthi sultan smoke
By Edward May 27, 2021 06:16 AM GMT
Report

தமிழ் சினிமாவில் அண்ணனிற்கு அடுத்தபடியான இடத்தினை பிடிக்க பல ஹிட் படங்கள் கொடுத்து வருபவர் நடிகை கார்த்தி. வெளிநாட்டில் பட்டபடிப்பை முடித்தவுடன் சினிமாவில் கலமிரங்க வீட்டில் அறிவுரைக்கேற்ப அறிமுகமாகினார்.

பருத்திவீரன் படத்தில் நடித்து மிகப்பெரிய இடத்தினை பிடித்தார் கார்த்தி. தற்போது நல்ல கதைகளை தேர்வு செய்து ஹிட் கொடுத்து வருகிறார். சமீபத்தில் வெளியான சுல்தான் படம் கலவையான விமர்சனம் பெற்று வசூலில் நல்ல வெற்றியை கண்டது.

இந்நிலையில் மாஸ் படங்களை தேர்வு செய்து நடித்து வரும் கார்த்தி புகைப்பிடிக்கும் காட்சிகள் அமையும் படங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.

ஆரம்பத்தில் பருத்திவீரன் உள்ளிட்ட சில படங்களில் புகைப்பிடிக்கும் காட்சியில் நடித்திருந்த கார்த்தி தற்போதுவரை அதுபோன்ற காட்சிகளை தவிர்த்து வருகிறார். மேலும் கோடி ரூபாய் கொடுத்தாலும் புகைப்பிடிக்கும் காட்சி அமையுடம் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்றும் கூறியுள்ளார்.