காட்டிக்கொடுத்து சூர்யாவை திட்டுவாங்க வைத்த கார்த்தி!! அண்ணன் செய்த செயல்...

Karthi Suriya Sardar 2
By Jai Sep 11, 2026 12:45 PM GMT
Report

சர்தார் 2

சர்தார் 2 படம் ரிலீஸாகி கலவையான விமர்சனத்தை பெற்றும் வரும் நிலையில், ஹைதராபாத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கல்ந்து கொண்டு பேசியுள்ளார்.

காட்டிக்கொடுத்து சூர்யாவை திட்டுவாங்க வைத்த கார்த்தி!! அண்ணன் செய்த செயல்... | Karthi Exposed Suriyas Secret To Dad Sivakumar

அதில், நான் 12வது படித்துக் கொண்டிருந்தபோது பொதுத்தேர்வுகளுக்காக படித்தேன். படிக்கிறேனோ இல்லையோ எப்போதும் கையில் புத்தகத்துடன் தான் இருப்பேன். அதனால் இவன் தான் நல்லா படிக்கிறான் என்று பெற்றோர்கள் நினைத்தார்கள். என் அண்ணன் அப்போது கல்லூரியில் படித்துக் கொண்டிருந்தார்.

தினமும் இரவு படம் பார்க்க தியேட்டருக்கு செல்வார். பகலில் நீ எங்கு வேண்டுமானாலும் போ, ஆனால் இரவானால் வீட்டிற்கு வந்துவிட வேண்டும் என்று எங்கள் அப்பாவின் ரூல்ஸ்.

சூர்யாவை திட்டுவாங்க வைத்த கார்த்தி

இரவு 12 மணிக்குள் வராவிட்டால் நான் கேட்டை பூட்டிவிடுவேன் என்றார் அப்பா. அதனால் இரவு 12 மணிக்கு முன்பே வீட்டுக்குள் வந்துவிடணும். படிப்பதால் இரவு 12 மணிக்கு நான் விழித்துக் கொண்டிருப்பேன்.

காட்டிக்கொடுத்து சூர்யாவை திட்டுவாங்க வைத்த கார்த்தி!! அண்ணன் செய்த செயல்... | Karthi Exposed Suriyas Secret To Dad Sivakumar

நைசா கேட் திறக்கும் சத்தம் கேட்டதும், அப்பா, அண்ணா இப்போ தான் வர்றான் என்று போட்டுக் கொடுத்துவிடுவேன். உடனே பால்கனியில் இருந்து கத்துவாரு அப்பா, எனக்கு அதைக்கேட்டு ஒரே சந்தோஷமாகிவிடும்.

நான் தான் போட்டுக் கொடுக்கிறேன் என்று அண்ணனுக்கு முதலில் தெரியாது, தனக்காக அப்பா காத்திருந்து கேட் திறக்கும் சத்தம் கேட்டதும் திட்டுகிறார் என்று நினைத்தார். அதன்பின் தூங்கும் அப்பாவை எழுப்பி திட்ட வைத்ததே நான் தான் என்று அண்ணனுக்கு தெரியும் என்று கூறியுள்ளார் கார்த்தி.