நடுராத்திரி கூட பாக்காம டார்ச்சர்.. விருமன் பட கார்த்தி போட்ட பதிவு..
பருத்தி வீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகியவர் சிவக்குமாரின் இரண்டாம் மகன் கார்த்தி. பருத்தி வீரன் படம் கொடுத்த மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து கிராமத்துபடங்களில் நடித்து வருகிறார் கார்த்தி.
சமீபத்தில் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் நடித்துள்ளார். கலவையான விமர்சனத்தை பெற்று வரும் இப்படத்தின் வெற்றி விழா கொண்டாடி பார்ட்டியும் கொடுத்திருந்தார் அப்படத்தின் தயாரிப்பாளர் சூர்யா.
இந்நிலையில் இணையத்தில் நடிகர் கார்த்தி ஒரு பதிவினை போட்டுள்ளார். அதில், நடுராத்திரி மூணு மணிக்கெல்லாம் சம்மர்சால்ட் அடிக்கவுட்டியே சாண்டி master மன்னிக்கவேமாட்டேன் என்று பதிவிட்டுள்ளார்.
நடுராத்திரி மூணு மணிக்கெல்லாம் சம்மர்சால்ட் அடிக்கவுட்டியே @iamSandy_Off master, மன்னிக்கவேமாட்டேன். Never done these acrobats before ?
— Actor Karthi (@Karthi_Offl) August 18, 2022
இனி எல்லா ஊர் திருவிழாலயும் நம்ம பாட்டு கண்டிப்பா இருக்கும் @thisisysr ?https://t.co/TmZ3COwPPl#வானம்_கிடுகிடுங்க video song.