விருமனுக்காக தம்பி கார்த்தி-க்கு சம்பளம் கொடுத்தாரா சூர்யா.. அண்ணன் தம்பிக்கு இதெல்லாம் இருக்குமா..
தமிழ் சினிமாவில் நடிகர் சிவக்குமாரின் மகன்களாக சூர்யா, கார்த்தி என இருவரும் சினிமாத்துறையில் அப்பாவுக்கு அடுத்தபடியாக நடிப்பில் பட்டையை கிளப்பி வருகிறார்கள். சூர்யா நடிப்பை தாண்டி தயாரிப்பிலும் ஈடுபட்டு வருகிறார்.
கார்த்தி பருத்திவீரன் படத்தில் ஆரம்பித்து கிராமத்து கதையையே தேர்வு செய்து நடித்து வருகிறார். அப்படி சூர்யாவின் 2டி தயாரிப்பில் முத்தையா இயக்கத்தில் விருமன் படத்தில் கார்த்தி நடித்துள்ளார். இப்படம் நேற்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
இப்படத்தில் முதன்முறையாக நடிகையாக சங்கர் மகள் அதிதி சங்கர் அறிமுகமாகியுள்ளார். இதன்பின் சிவகார்த்திகேயனின் மாவீரன் படத்தில் 25 லட்சம் சம்பளத்தில் கமிட்டாகி இருக்கிறார். இந்நிலையில் சூர்யா தயாரித்துள்ள விருமன் படத்திற்காக தம்பி கார்த்தி-க்கு எவ்வளவு சம்பளம் கொடுத்துள்ளார் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.
ஒரு படத்திற்காக கார்த்தி சுமார் 10 கோடி அளவில் சம்பளமாக பெற்று வருகிறார். அப்படி இருக்கும் போது அண்ணன் சூர்யா கார்த்தி-க்கு சம்பளம் கொடுப்பாரா? இல்லை அண்ணன் தம்பிக்குள்ள காசு கணக்கானு விட்டுவிடுவாரா என்று கூறி வருகிறார்கள்.
எனக்கு ரெண்டு நாளா மனசுல உருண்டுகுட்டு இருக்கது கார்த்திக்கு சூரியா சம்பளம் குடுத்துருபாப்புலையா...இல்ல...நமக்குள்ள என்னடா காசு கணக்குன்னு உட்டுருபாப்ளை யான்னுதான் ... #viruman #விருமன் pic.twitter.com/PpHcDls5F6
— B Hariharaselvam (@Hariharaselvam) August 13, 2022