கார்த்திகை தீபம் எபிசோட் அப்டேட்: சாமுண்டீஸ்வரியின் பழைய பகையாளி யார்? அதிர்ச்சியில் உறைந்த கார்த்திக்!
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் விறுவிறுப்பான தொடர் 'கார்த்திகை தீபம்'. இந்த சீரியலில் அடுத்தடுத்து பல அதிரடி திருப்பங்கள் வரப்போகிறது. குறிப்பாக, சாமுண்டீஸ்வரியின் பழைய பகையாளியாக ஸ்ரேயா என்ட்ரி கொடுத்திருப்பது குடும்பத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அப்படி என்ன நடக்கப்போகிறது என்பதைப் பார்க்கலாம்.
சாமுண்டீஸ்வரிக்கு இதய தானம் செய்தது யார்? அருணின் இதயத்தை அம்மாவுக்கு பொருத்திய விஷயத்தை முன்பே தன்னிடம் சொல்லியிருக்கலாமே என்று ரேவதி, கார்த்திக்கிடம் வருத்தப்படுகிறார். அதற்கு கார்த்திக், "நீங்க எதை நினைச்சும் வருத்தப்படாதீங்க, எல்லாத்தையும் நாம பார்த்துக்கலாம்" என்று சொல்லி ரேவதியைச் சமாதானப்படுத்துகிறார்.
இதற்கிடையில், வீட்டுக்கு சோகமாக வரும் சாமுண்டீஸ்வரி, தனக்கு இதய தானம் செய்த அந்தக் குடும்பத்தை நேரில் பார்த்துப் பேச வேண்டும் என்று ரேவதியிடம் சொல்கிறார். ஆனால், அவர்கள் வெளியூரில் இருப்பதாகவும், ஊருக்குத் திரும்ப இன்னும் ஒரு மாதம் ஆகும் என்றும் சொல்லி சமாளிக்கிறார்கள். இதைக் கேட்ட சாமுண்டீஸ்வரி, "அப்படின்னா போன்லயாவது பேசணுமே" என்று கேட்கிறார்.
உடனே கார்த்திக் கொடுத்த நம்பருக்கு போன் செய்ய வைக்கிறார். போனை எடுக்கும் கார்த்திக், தான் யார் என்று காட்டிக்கொள்ளாமல் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்தவர் மாதிரியே பேசுகிறார். "அருண்னு ஒருத்தர் இறந்துட்டாரு. அவரோட இதயம்தான் உங்களுக்குப் பொருத்தப்பட்டிருக்கு. நாங்க ஊருக்கு வந்ததும் கண்டிப்பா உங்களை நேர்ல வந்து பார்க்கிறோம்" என்று சொல்லி கார்த்திக் சமாளிக்கிறார். தினேஷின் அக்கா ஸ்ரேயாவின் அதிரடி என்ட்ரி! மறுபக்கம், வில்லன்களான சிவனாண்டியும் சந்திரகலாவும் வழக்கம்போல அடுத்ததாக என்ன பிரச்சனை செய்யலாம் என்று திட்டம் போட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்த நேரத்தில் சாமுண்டீஸ்வரி வீட்டில் எல்லோரும் சந்தோஷமாகப் பேசிக்கொண்டிருக்க, தினேஷுக்கு ஒரு போன் வருகிறது. தன்னுடைய அக்கா ஸ்ரேயாவை அழைத்து வருவதற்காக தினேஷ் ஏர்போர்ட்டுக்குச் செல்கிறார். அங்கிருந்து வீட்டுக்கு வரும் வழியில், சாமுண்டீஸ்வரியைப் பற்றி ஸ்ரேயாவிடம் தினேஷ் பெருமையாகப் பேசிக்கொண்டே வருகிறார்.
முதலில் யாரைப் பற்றிப் பேசுகிறோம் என்று தெரியாமல் கேட்டுக்கொண்டிருந்த ஸ்ரேயா, அந்தப் பெண்ணின் பெயர் சாமுண்டீஸ்வரி என்று தெரிந்ததும் அதிர்ச்சியில் உறைந்து போகிறார். சாமுண்டீஸ்வரி – ஸ்ரேயா இடையே வெடித்த பழைய பகை! வீட்டுக்கு வரும் ஸ்ரேயாவை பூங்கொத்து கொடுத்து வரவேற்க சாமுண்டீஸ்வரி வருகிறார். ஆனால், ஸ்ரேயாவைப் பார்த்த அடுத்த நொடியே சாமுண்டீஸ்வரிக்கு பேரதிர்ச்சி ஏற்படுகிறது. "நீயா? எப்படி இருக்க? ரொம்ப நாளாச்சு உன்னைப் பார்த்து" என்று சாமுண்டீஸ்வரி கேட்கிறார். ஆனால், ஸ்ரேயாவோ வந்ததுமே கோபத்தில் வெடிக்கிறார்.
"என் வாழ்க்கையையே கெடுத்தவள் நீதானே! இப்போ உன் பொண்ணை என் தம்பிக்குக் கல்யாணம் செய்து வைத்து இருக்கியா? உன்னை மறுபடியும் நேர்ல பார்ப்பேன்னு கொஞ்சம்கூட எதிர்பார்க்கல. இனிமே என் தம்பி இங்கே இருக்கவே மாட்டான்" என்று சாமுண்டீஸ்வரியை கடுமையாகத் திட்டிவிட்டு, தினேஷை அங்கிருந்து அழைத்துச் செல்கிறார். உண்மையைத் தேடிப் புறப்பட்ட கார்த்திக்! ஸ்ரேயா இப்படி கோபப்பட்டு தினேஷை அழைத்துச் சென்ற விஷயத்தை மயில் ஓடிப்போய் கார்த்திக்கிடம் சொல்கிறார். இதைக் கேட்ட கார்த்திக் தீவிரமாக யோசிக்கத் தொடங்குகிறார். "சாமுண்டீஸ்வரிக்கும் ஸ்ரேயாவுக்கும் அப்படி என்ன பழைய பிரச்சனை இருக்கும்? எதுக்காக இவ்வளவு கோபப்படுறாங்க?" என்று யோசிக்கும் கார்த்திக், இதற்கான உண்மையைத் தெரிந்துகொள்ள ஸ்ரேயாவும் தினேஷும் இருக்கும் வீட்டுக்கே நேரில் செல்கிறார்.
மறுபக்கம், சாமுண்டீஸ்வரிக்கும் தனக்கும் இடையே இருக்கும் பழைய பகையைப் பற்றி ஸ்ரேயா தனது தம்பி தினேஷிடம் பேசிக்கொண்டிருக்கிறார். சரியாக அந்த நேரத்தில் கார்த்திக் அங்கே வந்து நிற்கிறார்.
இனி ஸ்ரேயாவிடம் கார்த்திக் என்ன கேட்கப் போகிறார்? சாமுண்டீஸ்வரிக்கும் ஸ்ரேயாவுக்கும் இடையே இத்தனை வருடங்களாக இருக்கும் பகை என்ன? சாமுண்டீஸ்வரியின் கடந்த காலத்தில் மறைந்திருக்கும் அந்த அதிர்ச்சி ரகசியம் என்ன? என்பதை அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.