அயலி எபிசோட் அப்டேட்: லாக்கரில் சிக்கிய வர்மாவின் ரகசிய சிடி... கபிலன் வீடு திரும்பியதால் நிம்மதியடைந்த குடும்பம்!
அயலி’ சீரியல்
Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 8:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் ‘அயலி’ சீரியல், அடுத்தடுத்த அதிரடி திருப்பங்களுடன் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்த வகையில், இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்பதைப் பார்க்கலாம்.

லாக்கரில் கிடைத்த முக்கியமான ஆதாரம்! அயலி தனது அம்மாவின் சேஃப்டி லாக்கரைப் பராமரிக்கும் மேனேஜரைச் சந்திக்கச் செல்கிறார். இரவு நேரத்தில் அவசரமாக வந்திருப்பதாகக் கூறி, லாக்கரைத் திறக்கச் சொல்கிறார். லாக்கர் திறக்கப்பட்டதும், அதற்குள் ‘வர்மா’ என்று பெயர் எழுதப்பட்ட ஒரு சிடி இருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைகிறார். உடனே அந்த சிடியை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்புகிறார். மந்திரியின் மிரட்டல்... விஜயகுமாரின் கோபம்!
இதற்கிடையில், மந்திரியின் வீட்டுக்கு வரும் இந்திராணியும் உதயபெருமாளும் அவரைச் சந்தித்துப் பேசுகிறார்கள். அப்போது மந்திரி, விஜயகுமாருக்கு போன் செய்து, “யார் மேல கை வச்சிருக்க? உடனே அவனை விட்டுவிடு” என்று மிரட்டுகிறார். இதனால் வேறு வழியில்லாமல் விஜயகுமாரும் அவனை விடுவிப்பதாகச் சொல்கிறார். மறுபக்கம், லாக்கரில் எடுத்த சிடியுடன் அயலி விஜயகுமாரைச் சந்திக்கிறார். அந்த சிடியைப் போட்டுப் பார்க்கிறார்.

அதில் 2003-ஆம் ஆண்டு நடந்த ஒரு திருமண விழாவின் புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன. அந்தப் புகைப்படங்களில் வர்மா யார் என்று விஜயகுமார் கேட்க, கபிலன் ஒருவரை அடையாளம் காட்டுகிறார். அப்போது, “அதைப் பார்த்து அதிர்ச்சியாகும் இவர்கள் நல்லதா வர கொன்னுட்டோமே என்று கேட்க நீங்கள் கொன்றது ஒரு குளோனிங் நபரை. இதைக்கூட இப்போதுதான் கண்டுபிடிக்கிறீர்களா?” என்று கபிலன் நக்கலாகப் பேசுகிறான்.
கபிலன் வீடு திரும்புதல்
இதனால் வர்மா தொடர்பான மர்மம் மேலும் விறுவிறுப்பாகிறது. வீட்டில் பதற்றம்... திடீரென வந்த கபிலன்! மறுபக்கம், தனது மகனுக்கு என்ன ஆனதோ என்று செல்வநாயகி பதற்றத்துடன் புலம்பிக் கொண்டிருக்கிறார். வீட்டில் இருக்கும் அனைவரும் கவலையில் இருக்க, அயலியையும் காணவில்லை என்பதால் அவளைத் தேடுகிறார்கள்.

சிறிது நேரத்தில் மாடியிலிருந்து கீழே வரும் அயலியிடம், போன் செய்தும் ஏன் எடுக்கவில்லை என்று கேட்கிறார்கள். அதற்கு, வீட்டிலும் மருத்துவமனையிலும் ஏசியிலேயே இருந்ததால் கடுப்பாகி, கொஞ்ச நேரம் வெளியில் நடந்து வரச் சென்றதாகச் சொல்லிச் சமாளிக்கிறார். அந்த நேரத்தில் வாசலில் கார் வந்து நிற்கும் சத்தம் கேட்கிறது.
காரிலிருந்து இறங்கி கபிலன் வீட்டிற்குள் வருகிறான். அவரைப் பார்த்ததும் குடும்பத்தினர் அனைவரும் நிம்மதியடைகிறார்கள். உடனே அவனிடம், “என்னாச்சு? யாராவது அடிச்சாங்களா?” என்று பதற்றத்துடன் விசாரிக்கிறார்கள். அதற்கு கபிலன், “அக்காவோட பேசினதுக்குப் பிறகு என் மேல யார் கை வைக்க முடியும்?” என்று கெத்தாகப் பதில் சொல்லி அனைவரையும் சமாதானப்படுத்துகிறார். ஆரத்தி எடுத்து வரவேற்ற குடும்பம்! கபிலன் பத்திரமாக வீட்டுக்குத் திரும்பியதால் குடும்பத்தினர் அனைவரும் சந்தோஷமடைகிறார்கள்.
அவருக்கு ஆரத்தி எடுத்து வீட்டிற்குள் அழைக்க முடிவு செய்கிறார்கள். ஆரத்தித் தட்டைக் கொண்டு வரும் ரித்திகா, “நான்தான் ஆரத்தி சுத்துவேன்” என்று சொல்ல, செல்வநாயகியும் “நான்தான் சுத்துவேன்” என்று போட்டி போடுகிறார்கள்.
இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய அயலி சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.