அப்படி இருந்தா அம்மா ரோல்க்கு கேப்பாங்கன்னு இதை பண்றேன்!! உண்மையை கூறிய கார்த்திகை தீபன் ரியா..
Serials
Tamil TV Serials
Tamil Actress
Actress
By Jai
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பாகும் கார்த்திகை தீபம் சீரியலில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானவர் நடிகை ரியா செளத்ரி. இந்த சீரியல் மூலம் பிரபலமான ரியா, உடல் எடையை குறைக்க கடினமாக உடற்பயிற்சி செய்து வருவதை வழக்கமாக வைத்திருக்கிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில், 3 ஆண்டுகளாக உடற்பயிற்சி செய்ய ஆரம்பித்து, ஒன்றரை ஆண்டுகளாக ப்ராப்பர் டிரைனிங் எடுத்து வருகிறேன். இதற்கு காரணம், 3 இருக்கிறது. கோவிட் வருவதற்கு முன் நான் 48 கிலோ எடை இருந்தேன்.
கோவிட்-க்கு பின் நான் 62 கிலோவாக அதிகரித்து குண்டாக அப்போது இருந்தேன். எனக்கு வர சீரியல் வாய்ப்புக்கள் என் வயதைவிட அதிகமாக இருக்கும் ரோலில் நடிக்க தான் வந்தது. இதுக்கு மேல் போனால் அம்மா ரோலில் நடிக்க கூப்பிடுவார்கள் என்பதால் ஒர்க்கவுட் செய்ய ஆரம்பித்தேன் என்று ரியா கூறியிருக்கிறார்.
