அடுத்தடுத்த திட்டத்தை அரங்கேற்றும் சந்திரகலா.. கார்த்திக்கு காத்திருக்கும் புது சவால் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு அப்டேட்..

Serials Zee Tamil Tamil TV Serials
By Jai Sep 18, 2026 06:45 AM GMT
Report

தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் சாமுண்டீஸ்வரி ஒரு நாடகத்தை போட்டு ராஜராஜனை காப்பு கட்டு செல்ல விடாமல் தடுத்த நிலையில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அடுத்தடுத்த திட்டத்தை அரங்கேற்றும் சந்திரகலா.. கார்த்திக்கு காத்திருக்கும் புது சவால் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு அப்டேட்.. | Karthigai Deepam Sep 18 Episode Details

அதாவது, சாமுண்டீஸ்வரி உடன் பஞ்சாயத்துக்கு வரும் ராஜராஜன் கோவில் கும்பாபிஷேகம் தொடர்பாக எந்த ஒரு விஷயத்துக்கும் இனி நான் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு இங்கிருந்து கிளம்பி வருகிறார். ராஜராஜனின் இந்த முடிவால் ஊர் மக்கள் அதிர்ச்சி அடைகின்றனர்.

அதன் பிறகு வீட்டுக்கு வந்த ராஜராஜன் எங்க அம்மா ஆசைப்பட்ட மாதிரி கும்பாபிஷேகத்துக்கு வரமாட்டேன் என்று சொல்லிட்டேன் என்று சொல்லி வருத்தப்பட இதற்கு முன்னாடி என்னை ஏமாத்திட்டு கோவிலுக்கு போனா மாதிரி இந்த முறை பண்ணுங்க நான் என்ன பண்ணுவேன் என்று தெரியாது என சாமுண்டீஸ்வரி ராஜராஜனை மிரட்டுகிறாள். பிறகு மயில்வாகனம் கார்த்திக்கு போன் செய்து நடந்த விஷயங்களை சொல்லி எல்லாத்துக்கும் காரணம் சந்திரகலா தான் என்று சொல்கிறான்.

அடுத்தடுத்த திட்டத்தை அரங்கேற்றும் சந்திரகலா.. கார்த்திக்கு காத்திருக்கும் புது சவால் - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு அப்டேட்.. | Karthigai Deepam Sep 18 Episode Details

ரேவதியை திரும்பவும் வீட்டுக்கு வர வைக்க வேண்டும் என்பதற்காக இப்படி எல்லாம் பண்ணிட்டு இருக்காங்க என்று சொல்கிறான். அடுத்ததாக சிவனாண்டி சில ஆட்களை கார்த்தியின் ஆதரவாளர்கள் என்ற பெயரில் ஏவி விட்டு சாமுண்டீஸ்வரி ஊர் மக்களை தாக்க சொல்ல அவர்களின் ஊருக்கு வந்து மக்களை தாக்குகின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.