கோமாவில் இருந்து மீண்டு வந்த மகேஷ்.. கார்த்திக் செய்யப் போவது என்ன? - கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்
கார்த்திகை தீபம்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் கார்த்திகை தீபம். இந்த சீரியலில் நேற்றைய எபிசோடில் மகேஷ் கோமாவில் இருந்து மீண்டு வந்த நிலையில் இன்று நடக்கப்போவது என்ன என்பது குறித்து பார்க்கலாம் வாங்க.

அதாவது, ஹாஸ்பிடலில் இருந்து வெளியே வந்த மகேஷ் நேரடியாக சென்று மாயாவை சந்திக்கிறான். இந்த ஊரை விட்டு போயிடலாம் என்று சொல்ல மாயா வேண்டாமேடி இருக்கலாம் என்று சொல்ல இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகி ஒரு கட்டத்தில் ஊரைவிட்டு செல்லலாம் என முடிவெடுக்கிறனர். ஊருக்கு செல்வதற்காக இருவரும் கிளம்பி பஸ் ஸ்டாண்டில் நிற்க அப்போது சிவனாண்டி முத்துவேல் ஆகியோர் இவர்களை பார்த்து சந்திரகலாவுக்கு தகவல் கொடுக்கின்றனர்.
சந்திரகலா அவங்கள புடிச்சு வை, அவங்கள நம்ப வழிக்கு கொண்டு வந்து காய் நகர்த்தலாம் என சொல்கிறாள். பிறகு எல்லோருமாக சேர்ந்து மகேஷ், மாயாவின் மனதை மாற்றிய தங்களது திட்டத்திற்கு ஒத்துழைக்க சம்மதிக்க வைக்கின்றனர். அதை வேளையில் கார்த்திக்கும் மகேஷ் கோமாவில் இருந்து மீண்ட விஷயம் தெரிய வருகிறது. ஆனால் ரேவதிக்கு பிரச்சனை ஏற்படலாம் என யோசிக்கிறான்.

அடுத்ததாக ரேவதி தனது பிறந்த நாள் என்பதால் கார்த்திக் போன் செய்து வாழ்த்து சொல்வார் என இரவு 12 மணி வரை தூங்காமல் முழித்திருக்கிறாள். ஆனால் கார்த்தியிடமிருந்து எந்த ஒரு போன் காலும் வராத நிலையில் ரேவதி குழப்பம் அடைந்து மறுநாள் காலையில் எழுந்து நேரடியாக கார்த்தியை சந்திக்க செல்கிறாள்.
இந்த விஷயம் அறிந்த சாமுண்டீஸ்வரி அதிர்ச்சியாக ரேவதி கார்த்தியை சந்தித்து அவனுடன் கோவிலுக்கு செல்வது, வெளியில் செல்வது என பிறந்த நாளை மகிழ்ச்சியாக கொண்டாடுகிறாள். இப்படியான நிலையில் அடுத்ததாக நடக்க போவது என்ன என்பது குறித்து அறிய கார்த்திகை தீபம் சீரியலை உங்கள் Zee தமிழ் தொலைக்காட்சியில் காணத்தவறாதீர்கள்.