துப்பாக்கி முனையில் ரேவதி.. குடும்பத்தினருக்கு ஷாக்! கார்த்திகை தீபம் இன்றைய எபிசோட் அப்டேட்..
கார்த்திகை தீபம்
தமிழ் சின்னத்திரையில் Zee தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் சனி வரை இரவு 9:00 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் ‘கார்த்திகை தீபம்’. இந்த தொடரில் இன்று பரபரப்பும், அதிர்ச்சியும் நிறைந்த பல திருப்பங்கள் ரசிகர்களை காத்திருக்கின்றன. கோவிலில் நடந்த சம்பவங்கள் குறித்து கார்த்திக் மற்றும் ரேவதி, பரமேஸ்வரி பாட்டியிடம் விளக்குகின்றனர். அதை கேட்ட பாட்டி மகிழ்ச்சியடைந்து, கும்பாபிஷேகம் எந்த தடையும் இன்றி சிறப்பாக நடைபெற வாழ்த்துகிறார்.

இதையடுத்து வீட்டில் அனைவரும் இருக்கும் நேரத்தில், முகமூடி அணிந்த மர்ம நபர் ஒருவர் திடீரென உள்ளே நுழைகிறார். அவர் யார் என்று தெரியாமல் ரேவதி அருகில் செல்ல, அந்த நபர் துப்பாக்கியைக் காட்டி ரேவதியை பணயக் கைதியாக பிடித்துக் கொண்டு, “யாராவது அருகில் வந்தால் சுட்டுவிடுவேன்” என்று மிரட்டுகிறார். இதனால் குடும்பத்தினர் அனைவரும் கடும் அதிர்ச்சியடைகின்றனர். அந்த சமயத்தில் கார்த்திக் சாமர்த்தியமாக செயல்பட்டு, மர்ம நபரின் கையிலிருந்து துப்பாக்கியை தட்டிவிடுகிறார். அப்போது அது ஆண் அல்ல, பெண் என்பது தெரியவருகிறது.
மேலும், அவர் ரேவதியின் நெருங்கிய தோழி என்பதும் வெளிச்சத்துக்கு வருகிறது. திருமணத்திற்கு வர முடியாததால் தற்போது ரேவதியை சந்திக்க வந்ததாகவும், இந்த சந்திப்பு மறக்க முடியாத அனுபவமாக இருக்க வேண்டும் என்பதற்காகவே இப்படி நாடகம் ஆடியதாகவும் அவர் கூறுகிறார். தனது தோழியை குடும்பத்தினருக்கு அறிமுகப்படுத்தும் ரேவதி, “இவர் நன்றாக நடிப்பார்” என்று பெருமையாகச் சொல்கிறாள். அதன்பிறகு சந்திரமுகி பாணியில் நடித்து காட்டிய அவரை அனைவரும் ரசித்து பாராட்டுகின்றனர்.

பின்னர் அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவருந்தும் போது, ரேவதியின் தோழியின் முகத்தில் ஏதோ சோகத்தை கவனிக்கிறார் கார்த்திக். வீட்டை விட்டு கிளம்பும் நேரத்தில் தனியாக பேசும் அவர், “உங்களுக்கு ஏதோ பிரச்சினை இருப்பது போல தெரிகிறது. என்ன விஷயம்?” என்று கேட்கிறார். அப்போது தனது பெயர் காவியா என்றும், தான் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவிக்கிறார். இந்த தகவலைக் கேட்டு கார்த்திக் அதிர்ச்சியடைகிறார்.

மேலும் இந்த விஷயம் ரேவதிக்குத் தெரியக்கூடாது என காவியா கேட்டுக்கொள்ள, அவருக்கு ஆறுதல் கூறி கார்த்திக் அனுப்பி வைக்கிறார். பின்னர் ரேவதி கேள்வி எழுப்பும்போதும், உண்மையை மறைத்து சமாளிக்கிறார். மறுபுறம், சந்திரகலா அனுப்பிய மூன்று பேர் சாமுண்டீஸ்வரியின் வீட்டுக்கு வந்து, ராஜராஜன் கோவிலில் கருப்பு வேஷம் அணிந்து சிறப்பாக ஆடியதாகவும், அதற்காக நன்றி தெரிவிக்க வந்துள்ளதாகவும் கூறுகின்றனர்.
இதைக் கேட்டு சாமுண்டீஸ்வரி பெரும் அதிர்ச்சியில் ஆழ்கிறார். இந்நிலையில் அடுத்ததாக என்ன நடக்கப் போகிறது? காவியாவின் உடல்நிலை குறித்த உண்மை ரேவதிக்கு தெரியவருமா? சாமுண்டீஸ்வரி எப்படிப் பதிலடி கொடுக்கப் போகிறார்? என்ற பரபரப்பான கேள்விகளுக்கு விடை காண, ‘கார்த்திகை தீபம்’ தொடரின் அடுத்த எபிசோடை தவறாமல் காணுங்கள்.