கார்த்திகை தீபம் மாஸ்க்!! பீஸ்ட் வில்லனை வைத்து கலாய்க்கும் நெட்டிசன்கள்..

Serials Zee Tamil Tamil Memes Tamil TV Serials
By Jai Sep 30, 2026 02:15 PM GMT
Report

சின்னத்திரை சீரியல்களில் இடம்பெறும் ஒருசில காட்சிகள் சில நேரங்களில் லாஜிக்கே இல்லாமல் எடுக்கப்பட்டு ஒளிபரப்பாகி ட்ரோல் மெட்டீரியலாக மாறிவிடும். அப்படி, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் கார்த்திகை தீபம் சீரியலின் ஒரு காட்சி பயங்கரமான ட்ரோல் மெட்டீரியலாக மாறியிருக்கிறது.

கார்த்திகை தீபம் மாஸ்க்!! பீஸ்ட் வில்லனை வைத்து கலாய்க்கும் நெட்டிசன்கள்.. | Karthigai Deepam Zee Tamil Serial Trolls Beast

கார்த்திகை தீபம் மாஸ்க்

சீரியலில் கதாநாயகியான ரேவதிக்கு, ஏற்கனவே ஏமாற்றிய மகேஷை மீண்டும் திருமணம் செய்து வைக்க சந்திரலேகா பிளான் போடுகிறார். ஆனால் மகேஷின் உண்மையான முகம் தெரிந்தால் சாமுண்டேஸ்வரி சம்மதிக்க மாட்டார் என்று மகேஷின் உருவத்தையே மாற்றி வேறொரு நபராக காட்ட முயல்கிறார்.

இதற்காக மேக்கப் ஆர்ட்டிஸ்ட்டை வரவழைத்து ரப்பர் முகமூடியை முகத்தில் மாட்டுகிறார்கள். இதனை பார்த்த நெட்டிசன்கள் மகேஷின் அந்த மேக்கப், விஜய்யின் பீஸ்ட் படத்தில் இடம்பெற்ற தீவிரவாதி முகமூடியை போல் இருக்கிறது என்று கலாய்த்து வருகிறார்கள்.

கார்த்திகை தீபம் மாஸ்க்!! பீஸ்ட் வில்லனை வைத்து கலாய்க்கும் நெட்டிசன்கள்.. | Karthigai Deepam Zee Tamil Serial Trolls Beast