நயன்தாராவிற்கே வாழ்க்கை என்னால் கிடைச்சது! சர்ச்சையை கிளப்பியசுச்சியின் முன்னாள் கணவர்!

dhanush nayantara yaradineemogini karthikkumar americamappillai
By Jai Jun 21, 2021 09:25 AM GMT
Report

சினிமாவில் பெரும்பாலான படங்களில் அமெரிக்கா மாப்பிள்ளை என்றால் திருமணம் வரை சென்று அதிலும் தாலிக்கட்டும் நேரத்தில் ஹீரோ அதை தடுத்துவிடுவார். அப்படியாக பல படங்களில் அமெரிக்க மாப்பிள்ளையாக நடித்தவர் நடிகர் கார்த்திக் குமார். பிரபல பாடகி சுசித்ராவின் முன்னாள் கணவராவார்.

அதிலும் யாரடி நீ மோகினி படத்தில் தனுஷிற்கு நண்பராகவும், நயன் தாராவிற்கு வருங்கால மாப்பிள்ளையாகவும் நடித்து கதையையே மாற்றுவார். இப்படியாக அமெரிக்க மாப்பிள்ளையாக நடிப்பதை பற்றி சமீபத்தில் ஸ்டாண்ட் அப் காமெடி ஒன்றில் பேசியுள்ளார். விவாகரத்து பற்றி பேசினாலே பெரும்பாலான இந்தியர்கள் அமைதியாகிவிடுகிறார்கள்.

அமெரிக்கா மாப்பிள்ளைக்கே விவாகரத்தாகிவிட்டதா, அச்சோ என்று ரியாக்ட் செய்கிறார்கள். மத்தவங்களோ அமெரிக்கா மாப்பிள்ளைக்கு திருமணமாகிவிட்டதா என்று நினைக்கிறார்கள். எவ்வளவோ ஹீரோயினை நான் தாராம் செய்துள்ளேன். அதிலும் ஷாலினி, ராணி முகர்ஜி, லைலா உட்பட பல நடிகைகளுக்கு அப்படி செய்துள்ளேன்.

ஏன் சமீபத்தில் நயன் தாராவிற்கே (யாராடி நீ மோஜினி படத்தில்) வாழ்க்கை கிடச்சிருக்குனா நான் தான் காரணம். என்னுடைய கல்யாணத்திலே பயன் எனக்கு. யாராவது நிறுத்தி விடுவாங்களா என்று காமெடியாக பேசி சிரிக்க வைத்துள்ளார் நடிகர் கார்த்திக்.