படவாய்ப்பு கிடைக்காமல் வெளிநாட்டுக்கு ஓடிய ராதாவின் மகள்! இப்போ எப்படி இருக்காங்க?

radha tamilactress Karthika Nair tulasinair
By Edward Apr 19, 2022 03:30 AM GMT
Report

தமிழ் சினிமாவில் 80களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் ராதா. தன்னை போல் சினிமாவில் தன் மகள்களும் சிறந்த நடிகைகளாக வளம்வர வேண்டும் என்று அவர்களையும் அறிமுகப்படுத்தினார்.

கார்திகா நாயர், துளசி நாயர் என்ற இரு மகளையும் சினிமாவில் அறிமுகப்படுத்தினார் ராதா. இரண்டாம் மகள் துளசி ஒருசில படங்களில் நடித்தும் நல்ல வரவேற்பு பெறாததால் படிப்பில் கவனம் செலுத்த வெளிநாட்டில் செட்டிலாகினார்.

அவருக்கு அடுத்ததாக மூத்த மகள் கார்த்திகா நாயர் 2009ல் தெலுங்கில் ஜோஸ் என்ற படத்தின் மூலம் அறிமுகமாகினார், பின் தமிழில் கோ படத்தில் ஜீவாவிற்கு ஜோடியாக நடித்து நல்ல வரவேற்பு பெற்றார்.

பின் அண்ணக்கொடி, பொறம்போக்கு என்கிற பொதுவுடமை என்ற படங்களில் நடித்தார். உடல் எடையை ஏற்றியதால் அப்படங்களுக்கு பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் போனது.

இதனால் தன் தங்கையை போல் வெளிநாட்டில் செட்டிலாகியுள்ளார். கலிஃபோர்னியா, லண்டன் என்று நாடு நாடாக சுற்றி சமீபத்திய புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார்.