கோடிக்கணக்கில் சொத்து!! ராதா மகளுக்கு வரதட்சனையா கொடுத்தது இத்தனை கோடியா..
80, 90களில் கொடிக்கட்டி பறந்த நடிகைகளில் ஒருவர் நடிகை ராதா. டாப் நடிகையாக நடித்து வரும் நடிகை ராதா, ராஜசேகரன் நாயர் என்பவரை 1991 திருமணம் செய்து இரு மகள்கள் மற்றும் ஒரு மகனை பெற்றெடுத்தார். இரு மகள்களையும் சினிமாவில் அறிமுகம் செய்து வைத்தார்.
முதல் மகள் கார்த்திகா நாயர், தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் ஒருசில படங்களில் நடித்து வந்தார். 2015க்கு பின் சரியான வாய்ப்பில்லாமல் வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டார். சமீபத்தில் கார்த்திகா நாயர், காதலித்து வந்த காதலனை திருமணம் செய்து கரம் பிடித்தார்.
பிரம்மாண்டமாக நடைபெற்ற திருமணத்திற்கு பல முன்னணி நட்சத்திரங்கள் வந்திருந்தனர். பிரம்மாண்டமாக நடந்த திருமணம் 5 ஸ்டார் ஹோட்டல் என்று பல கோடி செலவில் நடைப்பெற்றுள்ளது.
சினிமாவில் ராதாவும் அவரது கணவரும் சேர்த்து வைத்த சொத்தினை நட்சத்திர ஓட்டலில் முதலீடு செய்து வைத்தும் பல இடங்களில் நிலமாகவும் வாங்கி குவித்துள்ளனர்.
இதனால் முதல் மகள் திருமணத்திற்காக 500 சவரன் நகை, விலையுயர்ந்த கார், பணம் என்று வரதட்சனையாக கொடுத்திருக்கிறார் ராதா தம்பதியினர்.
மேலும் தொழிலதிபரான கார்த்திகா திருமணம் செய்து கொண்டவர் சொத்து மதிப்பு மட்டும் 500 கோடியாக இருக்கும் என்று சமீபத்தில் பயில்வான் ரங்கநாதன் கூறி ஷாக் கொடுத்துள்ளார்.