அதை நம்பி ஏமாந்து போய் கழட்டும் நிலை!! இந்த பிரச்சனையால் சின்னாபின்னமான சிவகார்த்திகேயன்..
சினிமா பிரபலங்கள் பெரும்பாலும் சில விசயங்களில் நம்பிக்கை வைத்திருப்பார்கள். சிலர் சிலரின் அறிவுரைகளை கேட்டு அதன்படி நடப்பார்கள். மேலும் சிலர் ஆன்மீகம் மற்றும் ராசிக்கு ஏற்றபடி என்ன செய்யலாம் என்பதை அறிந்து அதை செய்வார்கள்.
அந்தவகையில் நடிகர் ரஜினி, தனுஷ், சிவகார்த்திகேயன், லோகேஷ் கனகராஜ் உள்ளிட்ட கோடப்பாக்க்கத்தில் இருக்கும் பலர் கருங்காலி மாலை நம்பி அதை அணிந்து கொள்வார்கள்.
இதனால் அதிர்ஷ்டம், தீங்கு நம்மிடம் வராது, நல்லதே நடக்கும், வெற்றி அமையும் என்ற காரணத்தால் தான் அதை அணிந்து கொள்கிறார்கள். ஆனால் அது சக்தி வாய்ந்த மாலையா என்ற கேள்வி எழுந்துள்ளது. சிவகார்த்திகேயன் சில ஆண்டுகளுக்கு முன் கருங்காலி மாலையை அணிந்து வந்தார்.
ஆனால் பிரின்ஸ் படத்தின் தோல்வியால் அதை கழட்டியும் வைத்தார். பின் இமான் பிரச்சனைக்கு முன் வெளிப்படையாக போட்டிருந்த சிவகார்த்திகேயன் தீபாவளி பண்டிகையின் போது பகிர்ந்த புகைப்படத்தில் அந்த மாலையை மறைத்திருக்கிறார். லோகேஷ் கனகராஜும் இந்த மாலையை அந்திருக்கிறார்.
லியோவும் கவலையான விமர்சனத்தை பெற்றது. கருங்காலி மாலை நல்லதா, வெற்றி கொடுக்குமா என்பதை விட அந்த மாலை, உடலில் ஏற்படும் பிரச்சனையை கட்டுப்படுத்த தான் பயன்படுகிறதாம்.
அப்படி என்றால் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் கருங்காலி மாலை அணிய உடலில் பிரச்சனை காரணமாக அணிகிறார்கள் என்ற கேள்வியை ரசிகர்கள் மத்தியில் எழ ஆரம்பித்திருக்கிறது.