கருப்பு படத்துல ஒன்னுமே இல்ல..சில்லித்தனமா இருக்கு!! பிரபலம் கொடுத்த விமர்சனம்..

Suriya Trisha RJ Balaji Tamil Movie Review Karuppu
By Jai May 15, 2026 01:31 PM GMT
Report

கருப்பு

இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்ட பலர் நடிப்பில் இன்று வெளியாகியுள்ள படம் தான் கருப்பு. வில்லனாக நடித்துள்ள ஆர்ஜே பாலாஜியின் கருப்பு படம் நேற்று மே 14 ஆம் தேதி ரிலீஸாகும் என்று எதிர்ப்பார்த்திருந்த நிலையில் தயாரிப்பு நிறுவனத்தின் ஃபைனான்ஸ் பிரச்சனையால் இன்று படம் ரிலீஸானது.

கருப்பு படத்துல ஒன்னுமே இல்ல..சில்லித்தனமா இருக்கு!! பிரபலம் கொடுத்த விமர்சனம்.. | Karuppu Gave A Negative Review Sathyendran Shocked

இந்நிலையில் படத்தை பார்த்த விமர்சகர் சத்யேந்திரன் தன்னுடைய கருத்துகளை கூறி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார்.

விமர்சனம்

அதில், கருப்பு படத்தில் ஒன்னுமே இல்லை, இயக்குநர் படத்தையும் சொதப்பி வைத்திருக்கிறார். படத்தினுடைய ஹீரோ சூர்யா 50 நிமிடங்கள் கழித்து தான் வருகிறார். அப்படி வந்தும் அவரை சரியாக பயன்படுத்தவில்லை. கருப்பு படத்தினுடைய சப்ஜெக்ட் சூப்பராக இருக்கு, ஆனால் ஆர்ஜே பாலாஜி சரியாக ஹோம் ஒர்க் செய்யவில்லை. சில்லித்தனமாக, அருவருப்பு காமெடி போல படத்தை எடுத்துள்ளார். கோர்ட் பத்தியும் அதில் நடக்கும் மோசடிகள் பற்றியும் 10 ஆயிரம் பக்கம் எழுதலாம், ஆனால் ஆர்ஜே பாலாஜி சரியாக ஹோம் ஒர்க் மொக்கயா ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார்.

கருப்பு படத்துல ஒன்னுமே இல்ல..சில்லித்தனமா இருக்கு!! பிரபலம் கொடுத்த விமர்சனம்.. | Karuppu Gave A Negative Review Sathyendran Shocked

இப்படம் சோசியல் மெசேஜை சொல்கிறதா? காமெடியா? என்று ஒண்ணுமே தெரியல. ஆர்ஜே பாலாஜிக்கு சுத்தமா பட எடுக்கவே தெரியவில்லை. இப்படத்தின் கதையை மெண்டல் ஹாஸ்பிட்டலில் உட்கார்ந்து கொண்டு ஸ்கிரிப்ட் எழுதியதுபோல் இருக்கு. இப்படி ஒரு கதையை எழுதுவதற்குதான் 3 ஆண்டுகள் ஆர்ஜே பாலாஜி கஷ்டப்பட்டாரா.

என்னிடம் கொடுத்திருந்தால் இந்த ஸ்கிரிப்ட்டை இரு நாட்களில் எழுதி கொடுத்திருப்பேன். இன்று தியேட்டரில் படம் பார்த்த அனைவரும் மிகவும் ரசித்து படம் பார்த்தார்கள். அவர்கள் அனைவரும் சூர்யாவின் ரசிகர்கள். இந்த படத்தில் திரிஷாவுக்கு வேலையே இல்லை, திரிஷா வேஸ்ட் எதுக்கு படத்தில் வருகிறார் என்றே தெரியவில்லை, அதேபோல இசையும் ரசிக்கும்படியா இல்லை என்று கருப்பு படத்தை விமர்சித்துள்ளார்.