கருப்பு திரைப்படத்தின் காலை 9 மணி காட்சி ரத்து.. ரசிகர்கள் அதிர்ச்சி

Suriya Box office
By Karthick Raja May 14, 2026 02:30 AM GMT
Report

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கருப்பு. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க சாய் அப்யங்கர் இசையமைத்திருந்தார்.

பெரிதும் எதிர்பார்ப்புடன் இன்று திரையரங்குகளில் இப்படம் வெளிவரவிருந்தது. காலையில் 9 மணிக்கு சிறப்பு காட்சி போட அனுமதியும் அரசு வழங்கி இருக்கிறது.

கருப்பு திரைப்படத்தின் காலை 9 மணி காட்சி ரத்து.. ரசிகர்கள் அதிர்ச்சி | Karuppu Morning Show Cancelled

ஆனால் தற்போது பைனான்ஸ் பிரச்சனை காரணமாக கருப்பு படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்து இருக்கிறது. பல தியேட்டர்கள் 9 மணி காட்சியை ரத்து செய்து இருக்கின்றன. இது குறித்து படத்தின் தயாரிப்பாளரும் அதிகாரபூர்வமான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியிருந்த கருப்பு திரைப்படம் ஏற்கனவே ரிலீஸ் தேதி தள்ளிப்போன நிலையில், தற்போது ரிலீஸ் நாளில் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக 9 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு வருத்தத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.