பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பும் கருப்பு.. இதுவரை வசூல் எவ்வளவு தெரியுமா
Suriya
Box office
Karuppu
By Karthick Raja
கடந்த வாரம் வெளிவந்து பாக்ஸ் ஆபிஸில் வசூல் வேட்டையாடி வரும் திரைப்படம் கருப்பு. ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் உருவான இப்படத்தில் சூர்யா நடித்திருந்தார். மேலும், த்ரிஷா, இந்திரன்ஸ், அனாகா ஆகியோர் நடித்திருந்தனர்.
இளம் சென்சேஷனல் இசையமைப்பாளர் சாய் அப்யங்கர் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி வெளிவந்த இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்தது.

இதனால் வசூலில் முதல் நாளில் இருந்தே பட்டையை கிளப்பி வருகிறது. இந்த நிலையில், கருப்பு திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, இப்படம் உலகளவில் இதுவரை ரூ. 240 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது. இனி வரும் நாட்களிலும் இப்படத்தின் வசூல் வேட்டை தொடரும் என சினிமா வட்டாரத்தில் கூறப்படுகிறது.