ரீலீஸாக கருப்பு படம்!! கண்ணீர் விட்டு வீடியோ வெளியிட்ட இயக்குநர் ஆர்ஜே பாலாஜி..
கருப்பு படம்
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் கருப்பு. இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க சாய் அப்யங்கர் இசையமைத்திருந்தார். பெரிதும் எதிர்பார்ப்புடன் இன்று திரையரங்குகளில் இப்படம் வெளிவரவிருந்தது.

காலையில் 9 மணிக்கு சிறப்பு காட்சி போட அனுமதியும் அரசு வழங்கி இருக்கிறது. ஆனால் தற்போது பைனான்ஸ் பிரச்சனை காரணமாக கருப்பு படம் ரிலீஸ் ஆவதில் சிக்கல் எழுந்து இருக்கிறது. பல தியேட்டர்கள் 9 மணி காட்சியை ரத்து செய்து இருக்கின்றன.
ரிலீஸ் நாளில் பைனான்ஸ் பிரச்சனை காரணமாக 9 மணி காட்சி ரத்து செய்யப்பட்டது ரசிகர்களுக்கு வருத்தத்தையும், அதிர்ச்சியையும் கொடுத்துள்ளது.

ஆர்ஜே பாலாஜி
இந்நிலையில், படத்தின் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி கண்ணீருடன் பேசிய வீடியோவை பகிர்ந்துள்ளார். கருப்பு படம் இன்று மாலை ரிலீஸாகும் என்றும் அந்த வீடியோவில் குறிப்பிட்டிருக்கிறார் இயக்குநர் ஆர்ஜே பாலாஜி.