தம்பி B K!! கருப்பு டிரைலரில் சிவகார்த்திகேயனை கலாய்த்த ஆர் ஜே பாலாஜி..
கருப்பு
இயக்குநர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா, திரிஷா உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ள படம் தான் கருப்பு. படத்தில் ஆர்ஜே பாலாஜி வில்லனாக நடிக்கிறார். பலமுறை தள்ளிப்போன கருப்பு படம் வரும் 14 ஆம்தேதி திரையரங்குகளில் ரிலீஸாகவுள்ளது.
இப்படத்தின் டிரைலர் கடந்த 10 ஆம் தேதி 7 மணிக்கு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது. கருப்பு டிரைலரில் இடம்பெற்று சில காட்சிகள் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
தம்பி B K
குணச்சித்திர நடிகை தீபா சங்கர், ஆர்ஜே பாலாஜியை நோக்கி, ’தம்பி B K கையில் துப்பாக்கி கிடைத்தால் யார் என்ன என்று பார்க்காமல் நீட்டிடுவியோ’ என்று கேட்கிறார்.
ஏற்கனவே கோட் படத்தில் சிவகார்த்திகேயனிடன் விஜய் துப்பாக்கி கொடுத்த்தும், மதராஸி படத்தில் துப்பாக்கி யார் கையில் இருந்தாலும் வில்லன் நான் தான் என்று வித்யூத் ஜம்வால் சொன்ன டயலாக்கும் நெகட்டிவ் விமர்சனத்தை பெற்றது. இதை வைத்து சிவகார்த்திகேயனை நெட்டிசன்கள் கலாய்த்து வந்தனர்.
தற்போது கருப்பு படத்தின் இந்த டயலாக், சிவகார்த்திகேயனை தான் ட்ரோல் செய்வது போல் இருக்கிறது என்று பலரும் கூறி வருகிறார்கள். அதேபோல் நடிகர் சூர்யா மாதிரியான முன்னணி நடிகரின் படத்தில் இளம் நடிகரான சிவகார்த்திகேயனை ட்ரோல் செய்யும் டயலாக்குகள் இல்லாமல் இருந்திருக்க வேண்டும் என்று சிலர் கூறி வருகிறார்கள்.
தளபதி விஜய் கொடுத்த துப்பா*க்கியை தளபதிக்கு எதிராக திருப்பிய சிவகார்த்திகேயன் எனும் நன்றி கெட்ட நாயை வச்சி செய்த R.J பாலாஜி🤣#TVK #vijay #jananayagan #whistle #TVKVijay pic.twitter.com/0BwkMKXSHy
— Rolex (@Rolex3839xr) May 11, 2026