உலகளவில் வசூலை வாரிக்குவிக்கும் கருப்பு.. இதுவரை எவ்வளவு தெரியுமா
Box office
Karuppu
By Karthick Raja
கடந்த மே மாதம் வெளிவந்து தமிழ் சினிமா பாக்ஸ் ஆபிஸில் பட்டையை கிளப்பிக் கொண்டு இருக்கும் திரைப்படம் கருப்பு.
ஆர்.ஜே. பாலாஜி - சூர்யா கூட்டணியில் உருவான இப்படத்தை ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் தயாரிக்க, சாய் அப்யங்கர் இசையமைத்திருந்தார்.

மே 15ஆம் தேதி வெளிவந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், கருப்பு சாமியை மையமாக வைத்து உருவான இப்படத்தை ரசிகர்கள் தலை மேல் வைத்து கொண்டாடி வருகிறார்கள். இதனால் வசூலில் ஒவ்வொரு நாளும் புதுப்புது சாதனைகளை கருப்பு படைத்து வருகிறது.
இந்த நிலையில் கருப்பு திரைப்படம் இதுவரை, அதாவது 20 நாட்களில் உலகளவில் செய்திருக்கும் வசூல் எவ்வளவு என்று தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 20 நாட்களில் இப்படம் ரூ. 319 கோடிக்கும் மேல் வசூல் செய்துள்ளது.