சூர்யாவின் கருப்பு திரைப்படம் இதுவரை செய்துள்ள வசூல்.. அடேங்கப்பா இத்தனை கோடியா
Box office
Karuppu
By Karthick Raja
சூர்யா நடிப்பில் உருவாகி கடந்த மே மாதம் வெளிவந்த கருப்பு திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டாகியுள்ளது. இப்படத்தை ஆர்.ஜே. பாலாஜி இயக்கி, வில்லனாகவும் நடித்திருந்தார்.
கருப்பு சாமியை மையமாக வைத்து உருவான இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து திரிஷா, இந்திரன்ஸ், அனாகா, ஷிவதா ஆகியோர் நடிக்க, சாய் அப்யங்கர் இசையமைத்துள்ளார்.

பிரம்மாண்ட பொருட்செலவில் எடுக்கப்பட்ட இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தது. இருப்பினும் பாக்ஸ் ஆபிஸில் முதல் நாளில் இருந்தே வசூலை வாரிக்குவித்து வந்தது.
இந்த நிலையில் 4 வாரங்களை வெற்றிகரமாக கடந்திருக்கும் கருப்பு திரைப்படம் உலகளவில் ரூ. 340 கோடி வசூல் செய்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.