நீயே சத்யராஜிடம் அல்வா வாங்கினவள்-னு சொல்றாங்க!! வெளுத்து வாங்கிய பிரபல நடிகை..
சினிமாவில் நடக்கும் அட்ஜெஸ்ட்மென் குறித்து பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் பல நடிகைகள் தங்களின் கருத்துக்களையும் தனக்கு நடந்த சம்பவங்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அந்தவகையில் நடிகை கஸ்தூரி சங்கர் அளித்த பேட்டியொன்றில், சினிமாவில் நடிகை அட்ஜெஸ்மெண்ட் செய்துதான் வாய்ப்பை பெறுகிறார் என்று பத்திரிக்கையில் எழுதிவிட்டால் அது உண்மையாகிவிடுமா?.
நீ பெரிய ஒழுக்கமா
எந்த பெண்ணும் படுப்பதற்காக சினிமாவிற்கு வரவில்லை, அதற்கு அவர்கள் நேரடியாக வேறு தொழிலுக்கு போய் இருப்பார்கள். எதற்கு சினிமாவிற்கு வந்து காலையில் எழுந்து மேக்கப் போட்டு எதையும் பார்க்காமல் கஷ்டப்பட வேண்டும். என்னை சிலர் நீயே சத்யராஜிடம் அல்வா வாங்கியவள்தானே? நீ பெரிய ஒழுக்கமா என கேட்கிறார்கள்.
ஆனால் சத்யராஜை பார்த்து யாரும் நீ கஸ்தூரிக்கு அல்வா கொடுத்தியே நீ ஒழுக்கமா என்று கேட்பதில்லை, ஏனென்றால் இது ஒரு ஆணின் வக்கிரபுத்தி. எத்தனை நடிகர்கள் கொலைக்காரனா, திருடனா, குடிகாரனா நடிக்கிறார்கள், அவர்கள் ஜெயிலுக்கு போகிறார்களா?.
ஒரு நடிகை படுக்கையறை காட்சியில் நடித்தால் மட்டும் ஏன் அவள் படுத்துவிட்டால் என்று கூறுகிறார்கள் எப்படி சொல்லலாம் என்று பகீரங்கமாக கொந்தளித்து பேசியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.