சித்தார்த்தை கூத்தாடி என கூறி விமர்சித்த பிரபலம்! அசிங்கப்படுத்தி பதிலடி கொடுத்த நடிகை கஸ்தூரி..

dmk siddharth kasthuri maridhas
By Edward May 15, 2021 04:39 PM GMT
Report

தமிழ் சினிமாவில் பாய்ஸ் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி முதல் படமே ஹிட் கொடுத்தவர் நடிகர் சித்தார்த். இதையடுத்து பெரியளவிற்கு சினிமாவில் இடம் பிடிப்பார் என்று எதிர்ப்பார்த்த நிலையில் இளம் நடிகராகவே தமிழ், தெலுங்கு சினிமாவில் ஜொலித்து வருகிறார்.

சினிமா தவிர சமுக கருத்துக்களை கூறி வந்த சித்தார்த், சமீபத்தில் உத்திரபிரதேசத்தில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பு அதிகரித்தும், ஆக்ஸிஜன் குற்றம் போன்றவற்றிற்காகவும் எதிர்த்து இணையத்தளத்தில் கருத்துக்களை தெரிவித்து இருந்தார்.

இதன் எதிரொலியாக பாஜக கட்சி சம்பந்தமான பலர் தனக்கும் தன் குடும்பத்தினருக்கு கால் செய்து மிரட்டல் விடுவதாகவும் தங்கையை ஆபாச வார்த்தையில் மிரட்டுவதாகவும் டிவிட்டர் பதிவில் பதிவிட்டு போலிசில் ஆதாரங்களையும் சமர்ப்பித்திருந்தார். சித்தார்த்திற்கு பல பாஜக சம்பந்தப்பட்ட பிரபலங்களுக்கு அவருக்கு எதிராக கருத்துக்களை விமர்சத்தவண்ணம் கூறி வந்தனர்.

சமீபத்தில் பத்திரிக்கையாளர் மாரிதாஸ் திமுக கட்சிக்கு எதிராக குற்றங்களை கூறி வருவதையடுத்து, சித்தார்த்தை கூத்தாடி என்று கூறி கடுமையாக விமர்சித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் பிரபல நடிகை கஸ்தூரி டிவிட்டரில் அசிங்கப்படுத்தி மாரிதாஸை சாடியுள்ளார்.