47 வயதில் ஐஏஎஸ்? நடிகை கஸ்தூரியை கிண்டல் செய்யும் நெட்டிசன்கள்..
biggboss
kasthuri
tamilactress
By Edward
தமிழ் சினிமாவில் 90களில் முன்னணி நடிகர்களான சத்யராஜ், பிரபு உள்ளிட்டவர்களுடன் ஜோடிபோட்டு நடிகையாக ஜொலித்தவர் நடிகை கஸ்தூரி.
90களில் ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் படவாய்ப்புகள் போகப்போக குறைய ஆரம்பித்து சினிமா மற்றும் அரசியல் விமர்சகராக சமுகவலைத்தளங்களிலும், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் பங்கு பெற்று வந்தார்.
அதன்பின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உள்ளே சென்ற ஒருசில வாரத்திலேயே திரும்பி வந்துவிட்டார். இதைதொடர்ந்து தற்போது சீரியல்களில் நடித்து வரும் கஸ்தூரி சமீபத்தில் அவர் வெளியிட்ட புகைப்படத்தை பார்த்து ஷாக்காகியுள்ளனர் ரசிகர்கள்.
ஸ்ரீ வனஜா என்ற பெயரோடு தமிழ் நாடு உள்துறை செயலர் என்ற பெயர் பலகையுடன் ஒரு புகைப்படத்தை வெளியிட்டது தான் அது. இதை பார்த்த ரசிகர்கள் உண்மையா இல்லை படத்தின் ரோலா என்று கேள்வி கேட்டு வருகிறார்கள்.