லேடி சூப்பர் ஸ்டார்-னா அந்த ரெண்டு நடிகைகள் தான்!! நயன்தாராவை அசிங்கப்படுத்திய நடிகை கஸ்தூரி..
தமிழ் சினிமாவில் 90ஸ் காலக்கட்டத்தில் முன்னணி நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை கஸ்தூரி. நடிப்பை தாண்டி நிகழ்ச்சி தொகுப்பாளினியாகவும் சமுக ஆர்வலராகவும் திகழ்ந்து வருகிறார் நடிகை கஸ்தூரி.
சமீபத்தில் பிரபல கட்சியில் இணைந்து, இணையத்தில் ஆக்டிவாக இருந்தும் பேட்டியளித்து கருத்துக்களை கூறி வருகிறார். சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் சூப்பர் ஸ்டார் யாருன்னு கேட்டா குழந்தை கூட சொல்லும் என்று கூறியுள்ளார்.
அதேபோல் நடிகைகளில் யார் சூப்பர் ஸ்டார் என்ற கேள்விக்கும் பதிலளித்துள்ளார். நடிகைகளை பொருத்தவரையில், அந்த நடிகைக்காகவே அந்த படத்தை பார்க்கலாம் என்று யார் ஒருவர் நடித்து படம் அமைகிறதோ அவர்களுக்காகவே படம் ஓட வேண்டும். அப்படி இருந்தால் தான் அவர் லேடி சூப்பர் ஸ்டார் என சொல்லமுடியும்.
அப்படி பார்க்கும் போது இந்த காலக்கட்டத்தில் அப்படியொரு நடிகை இல்லை. ஆரம்பகாலத்தில் கேபி சுந்தராம்பாள் மாதிரியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி நடித்த பல படங்களில் அவரை சுற்றித்தான் கதை அமையும். அவருக்கு பின் நடிகை விஜயசாந்தியை சொல்ல முடியும், இந்த இரண்டு பேரை தவிர இப்போது யாரும் இல்லை.
நான் நயன்தாரா ரசிகைதான். நயன்தாராவை வைத்து, மாயா என்ற ஒரு படம் மட்டும் தான் அவரை மையப்படுத்தி ஓடியது, மத்த படங்கள் ஓடவில்லை, அதனால் அவர் கிடையாது என்றும் கூறியிருக்கிறார் நடிகை கஸ்தூரி.