வானிதியிடம் தோற்றதற்கு பழித்தீர்த்த கமல்ஹாசன்! விக்ரம் படத்தை மோசமாக கலாய்த்த நடிகை..

Kamal Haasan Kasthuri Anirudh Ravichander Lokesh Kanagaraj Vikram Movie
By Edward May 13, 2022 06:55 AM GMT
Report

தமிழ் சினிமாவின் உலக நாயகனாக திகழ்ந்து வரும் நடிகர் கமல் ஹாசன் நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் விக்ரம். பல கோடி செலவில் கமல்ஹாசனை புது அவதாரத்தை கொண்டு இயக்கியுள்ள லோகேஷ் படத்தில் பல விஷயங்களை மறைத்து வைத்துள்ளார்.

படம் வரும் ஜூன் 3 ஆம் தேதி உலகம் முழுக்க இருக்கும் தியேட்டர்களில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் பாடல்கள் அனிருத் இசையில் உருவாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. மே 15 ஆம் தேதி டிரைலர் வெளியாக இருக்கும் நிலையில் கமல் ஹாசன் வரிகளில் அவரே பாடிய பத்தலே பத்தலே பாடல் சமீபத்தில் வெளியாகியுள்ளது.

பாடலில் சில அரசியல் வசனங்களும் இருப்பதை பலர் விமர்சித்து வந்த நிலையில் நடிகை கஸ்தூரியும் தன் பங்கிற்கு கலாய்த்துள்ளார்.

சகலகலாவல்லவன்+மார்க்கண்டேயன் = கமல். வானதி அம்மையாரிடம் தோத்த காண்டு மொத்தத்தையும் lyricsல இறக்கிட்டாப்ல.

ஒன்றியம் ங்குற ஒத்தை வார்த்தையில தன் மொத்த அரசியலையும் சுருக்கிட்டாப்ல. கூட்டணி ஆட்சியில இல்லைனாலும் படக்காட்சியில வந்துருச்சு!

என்று கூறி பதிவிட்டுள்ளார். எப்போது இணையத்தில் எதாவது ஒன்றினை கூறி வரும் கஸ்தூரியை இந்த கருத்திற்கு பலர் திட்டியும் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.