கத்ரீனா கைஃப் கர்ப்பமா? திருமணமாகி 6 மாதத்தில் வாய்ப்பிற்காக கணவர் எடுத்த அதிரடி முடிவு..

Pregnancy Indian Actress Katrina Kaif
3 நாட்கள் முன்
Edward

Edward

பால்வுட் சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்து வரும் நடிகை கத்ரினா கைஃப் சமீபத்தில் நடிகர் விக்கி கெளசலை காதலித்து கடந்த டிசம்பர் மாதம் திருமணம் செய்து கொண்டார். பிரம்மாண்ட முறையில் இருவரின் திருமணம் நடைபெற்று தற்போது இருவரும் ஹனிமூனிற்காக கடந்த 4 மாதங்களாக சுற்றி வருகிறார்கள்.

சமீபத்தில் நியூயார்க் சென்று அங்குள்ள பிரியங்கா சோப்ராவின் சொந்த ஓட்டலுக்கு விசிட் செய்துள்ள புகைப்படத்தை வெளியிட்டனர். இந்நிலையில், திருமணமாகி 6 மாதங்களாகிவிட்ட நிலையில் கத்ரினாவின் சமீபத்திய புகைப்படம் கர்ப்பமாக இருப்பதை போன்றிருந்துள்ளது.

இதனை வைத்து சமுகவலைத்தளத்தில் கேத்ரினா கைஃப் கர்ப்பமாக இருக்கிறார் என்ற் செய்தியும் இணையத்தில் பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தற்போது இதுகுறித்து கேத்ரினா கைஃபின் கணவர் தரப்பில் இருந்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. நாங்கள் இருவரும் படங்களில் நடிக்க கவனம் செலுத்தி வருகிறோம்.

திருமண வாழ்க்கையை தற்போது சந்தோஷமாக அனுபவிக்க முடிவு செய்திருப்பதால் போலியான செய்திகளை பரப்ப வேண்டாம் என்று கூறி முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விக்கி கெளசல்.

ஏற்கனவே, தீபிகாபடுகோனே கர்ப்பமாக இருக்கிறார் என்ற செய்தியும் இணையத்தில் வதந்தியாக செய்திகள் பரவியது என்பது குறிப்பிடத்தக்கது.

Gallery

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.