நயனுடன் இப்படியொரு ரோலில் ரொமான்ஸ் ! கவினுக்கு அடித்த அடுத்த லக் என்ன தெரியுமா?

Nayanthara Kavin Vignesh shivan Rowdybaby
By Edward Oct 16, 2021 01:09 AM GMT
Edward

Edward

Report

தமிழ் சினிமாவில் சிறு பட்ஜெட் படங்கள் மூலம் அறிமுகமாகி பின் சீரியலில் நடித்து பிரபலமானவர் நடிகர் கவின் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு பெரியளவில் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்ட கவின் சில படங்களில் கமிட்டாகி நடித்து வந்தார். அந்தவகையில் சமீபத்தில் கவின் அம்ரிதா இணைந்து நடித்த லிப்ட் படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.

தற்போது, லிப்ட் படத்தின் வெற்றியை தொடர்ந்து கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. அதில் ஒன்று தான் நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இணைந்து ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கும் புதிய படத்தில் கவினுக்கு நாயகனாக நடிக்கும் வாய்ப்பு.

இதுவரை வெறும் வார்த்தையாக மட்டும் கூறி வந்த நிலையில் தற்போது இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளனர்.

ரெளடி பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் வழங்கும் இப்படத்திற்கு ஊர்க்குருவி என தலைப்பு வைத்துள்ளனர். நடிகர் கவினுக்கு இப்படம் நிச்சயம் வெற்றி படமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.