40 கதை அஸ்வின் லிஸ்டில் சேர்ந்திருவாரோ! தலைக்கனத்தால் தடுமாறி ஆட்டம் போடும் கவின்..

kavin ashwinkumar aparnadass
By Edward Mar 11, 2022 12:30 PM GMT
Report

சின்னத்திரை தொலைக்காட்சியில் தொகுப்பாளராக பணியாற்றி அதன்பின் சரவணன் மீனாட்சி சீரியலில் நடித்து பிரபலமானவர் கவின். இந்த சீரியலுக்கு பிறகு பல கஷ்டங்களை சந்தித்து வந்த கவின் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டு மக்கள் மனதில் நீங்கா இடத்தினை பிடித்து வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கிடைத்த வருவாயை கொண்டு கடனை அடைத்தும் வந்தார். சமீபத்தில் லிப்ட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். தற்போது அஜித்தின் 61 வது படத்திலும் சிறு கதாபாத்திரத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

இந்நிலையில் ஏற்கனவே மேடை பேச்சு ஆணவத்தால் அஸ்வின்குமார் சர்ச்சையில் சிக்கியதை போன்று படப்பிடிப்பில் கவின் நடந்து கொண்டது எறிச்சலை கிளப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

மலையாள நடிகை அபர்ணா தாஸ், கவுன் இணைந்து நடித்து வரும் படத்தில் கவின் தவறான விஷயங்களை செய்து வருகிறாராம். அவரை மாற்றுங்கல், இவர் வேண்டாம் என்று பல அதிர்ச்சி தரும் செயலை செய்து படக்குழுவினரை கோபப்படுத்தி வருகிறாராம்.