கலவையான விமர்சனங்களுக்கு மத்தியில் கவினின் கிஸ் படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு?
Kavin
Tamil Actors
Box office
Kiss (2025 film)
By Bhavya
கிஸ்
தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் ஹீரோக்களில் ஒருவர் கவின். இவர் நடிப்பில் தற்போது வெளியாகியுள்ள படம் கிஸ். நடன இயக்குநர் சதீஸ் கிருஷ்ணன் இப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமாகியுள்ளார்.
இப்படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். மேலும் மிர்ச்சி விஜய், விடிவி கணேஷ், ராவ் ரமேஷ், தேவயானி என பலரும் நடித்திருந்தனர்.
ஃபாண்டஸி ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் சுமாரான வரவேற்பை பெற்றுள்ளது.
எவ்வளவு?
இந்நிலையில், இப்படத்தின் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் இரண்டாவது நாளில் ரூ. 1.5 கோடி வசூல் செய்துள்ளது.