ரொமான்ஸ் செய்த நடிகையுடன் காதலில் கவின்!! நெருக்கமாக எடுத்த புகைப்படத்தை பகிர்ந்த விஜய் பட நடிகை
சின்னத்திரை சீரியல்களில் முக்கிய ரோலில் நடித்து கதாநாயகனாக அறிமுகமாகி நடித்து வந்தவர் நடிகர் கவின். சரவணன் மீனாட்சி சீரியலில் வேட்டையனாக நடித்து அனைவரையும் கவர்ந்து வந்த கவின் சரியான வரவேற்பு கிடைக்காமல் ஒதுக்கப்பட்டு வந்தார்.
அதன்பின் பிக்பாஸ் 3 சீசனில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் இலங்கை போட்டியாளர் லாஸ்லியாவுடன் காதலில் இருந்து சர்ச்சையில் சிக்கினார். பின் அதை கண்டுகொள்ளாமல் நிகழ்ச்சிக்கு பின் நடிப்பில் கவனம் செலுத்த துவங்கினார்.

பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் லிஃப்ட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பு பெற்றதோடு பல லட்சக்கணக்கான ரசிகர்களை ஈர்த்தார். சமீபத்தில் கவின் நடிப்பில் டாடா என்ற படம் வெளியாகி நல்ல விமர்சனத்தை பெற்று வருகிறது.
கவினுக்கு ஜோடியாக பீஸ்ட் படத்தில் நடித்த அபர்ணா தாஸ் ஜோடியாக நடித்துள்ளார். இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை அபர்ணா தாஸ் இணையத்தில் பகிர்ந்து கவினுக்கு நன்றி கூறி ஒரு பதிவினை பகிர்ந்துள்ளார்.
அதற்கு கவினும் நன்றி கூறி வாழ்த்து தெரிவித்தும் இருந்தார். இதனை பலர் கவினுடன் காதலில் அபர்ணா தாஸ் என்ற கருத்துக்களை கூறி வருகிறார்கள்.