கவினின் வருங்கால மனைவி மோனிகா லாஸ்லியாவின் Stylist-ஆ.. வைரலாகும் புகைப்படம்..
சின்னத்திரையில் சீரியல் மற்றும் துணை நடிகராக திகழ்ந்து வந்த நடிகர் கவின் உதவி இயக்குனராகவும் பணியாற்றி வந்தார். கடந்த பிக்பாஸ் 2 சீசனில் போடியாளராக கலந்து கொண்டு அனைவரையும் ஈர்த்தார். நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இலங்கை பெண் லாஸ்லியாவை காதலித்து அதன்பின் பிரிந்தார்.
பிக்பாஸ்-க்கு பின் லிஃப்ட், டாடா போன்ற படங்கள் வெளியாகி கவினுக்கு நல்ல வரவேற்பை கொடுத்தது. தற்போது தனி ரசிகர்கள் பட்டாளத்தை பெற்று வரும் கவின் நடன இயக்குனர் சதீஷ் இயக்கத்தில், அனிருத் இசையில் ஒரு ரொமான்ஸ் படத்தில் நடிக்கவுள்ளார்.
சமீபத்தில் கவினுக்கு திருமணமாகவுள்ள செய்தி வைரலானது. தனியார் பள்ளியில் பணியாற்றி வரும் மோனிகா டேவிட் என்பவரை பல ஆண்டுகளாக காதலித்து வந்ததாகவும் இரு வீட்டார் சம்மதத்துடன் ஆக்ஸ்ட் 20ல் திருமணம் செய்யவுள்ளதாகவும் தகவல் வெளியானது.
இந்த செய்திக்கு பின் கவினை காதலித்து பிரிந்த லாஸ்லியா இன்ஸ்டாகிராமில் ரொமான்ஸ் பாடலோடு ஒரு ஸ்டோரி போட்டதை பலர் பகிர்ந்து வந்தனர். இந்நிலையில் லாஸ்லியாவிற்கு ஸ்டைலிஸ்ட்-ஆக மோனிகா டேவிட் பணியாற்றி இருக்கிறார்.
லாஸ்லியாவுடன் கவினின் வருங்கால மனைவி மோனிகா எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி இருக்கிறது. இதை பார்த்த நெட்டிசன்கள் ஷாக்கான ரியாக்ஷன் கொடுத்து வருகிறார்கள்.

