நடிகையுடன் பைக்கில் சுற்றும் கவின்! லாஸ்லியா பிரேக்கப்-க்கு பின் இப்படியா? உண்மை இதுதான்

Kavin
By Parthiban.A Sep 19, 2022 10:11 AM GMT
Parthiban.A

Parthiban.A

Report

கவின்

நடிகர் கவின் கானா காணும் காலங்கள், சரவணன் மீனாட்சி உள்ளிட்ட டிவி தொடர்கள் மூலமாக பெரிய அளவில் ரசிகர் கூட்டத்தை சம்பாதித்தவர். மேலும் அவர் பிக் பாஸ் ஷோவில் போட்டியாளராக கலந்துகொண்டு மேலும் பிரபலம் ஆனார்.

லாஸ்லியா உடன் அவரது காதல் விவகாரம் எல்லோருக்குமே தெரியும். ஆனால் அவர்கள் பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியில் வந்ததும் பிரேக்கப் செய்து விட்டார்கள்.

கவின் அதற்கு பிறகு சினிமாவில் பிசியாக நடிக்க தொடங்கிவிட்டார். நட்புனா என்னனு தெரியுமா படத்தில் ஹீரோவாக அறிமுகமான அவர், அதன் பின் அவர் நடித்த லிப்ட் படம் நேரடியாக ஓடிடியில் ரிலீஸ் ஆனது.

நடிகையுடன்  பைக்கில் சுற்றும் கவின்! லாஸ்லியா பிரேக்கப்-க்கு பின் இப்படியா? உண்மை இதுதான் | Kavin With Aparna Das In Dada Last Day

பைக்கில் நடிகையுடன் சுற்றும் போட்டோ..

இந்நிலையில் பிரபல நடிகை அபர்ணா தாஸ் உடன் கவின் பைக்கில் சுற்றும் போட்டோ ஒன்று வைரலாகி இருக்கிறது. லாஸ்லியா பிரேக்கப்புக்கு பிறகு கவின் இப்படி இறங்கிவிட்டாரா என யோசிக்க தொடங்கினர்.

என்னவென்று பார்த்தால்.. அவர்கள் தற்போது தாதா என்ற படத்தில் ஜோடியாக நடித்து வருகிறார்கள்.

அந்த படத்தின் ஷூட்டிங் நேற்றோடு நிறைவு பெற்று இருக்கிறது. அப்போது எடுத்த போட்டோ தான் அது. 


GalleryGallery