மகன், கணவர் இறப்பு!! 3 முறை தற்கொலைக்கு முயற்சி செய்த நடிகை கவிதா...
குழந்தை நட்சத்திரமாக திகழ்ந்து தென்னிந்திய மொழிப்படங்களில் நடித்து பிரபலமானவர் தான் நடிகை கவிதா. திருமணத்திற்கு பின் படங்களில் நடிப்பதில் இருந்து விலகி இருந்த கவிதா, சினிமாவில் இருந்து விலக என்ன காரணம் என்று கூறியிருக்கிறார்.
அதில், எனக்கு திருமணமாகி குழந்தைகள் பிறந்ததும், என் குடும்பத்தை பார்த்துக்கொள்ள வேண்டியிருந்தது. என் குழந்தைகளுக்கு சமைக்க வேண்டும், அவர்களை பள்ளிக்கு அனுப்ப வேண்டும் என்று பல கடமைகள் இருந்தது.
ஆனால் என் கவனம் முழுவதும் குழந்தைகள் மீதும் அவர்கள் வளர்ப்பு மீது இருந்ததால், நடிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை. எனக்கு குழந்தைகளை விட்டு பிரிய மனம் வரவில்லை.
தொடர்ந்து என் குழந்தைகளை கவனித்துக்கொள்ள வேண்டும், அவர்களுக்காக ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்துபார்த்து செய்தேன். இதனால் படங்களுக்கு ஒப்பந்தம் செய்வதில் இருந்து ஒதுங்கினேன் என்று நடிகை கவிதா தெரிவித்துள்ளார்.
மகன், கணவர் இறப்பு
மேலும் என் மகனும் கணவரும் நன்றாக இருந்தனர். ஆனால் இருவருக்கும் கொரானா தொற்று ஏற்பட்டு, கணவரின் நிலை மோசமாகியது. மருத்துவமனையில் சேர்த்த இரண்டு நாட்களின் மகன் இறந்தான், பின் கணவரும் உயிரிழந்தார்.
இதனால் வாழவே விருப்பம் இல்லாமல் 3முறை தற்கொலை முயற்சி செய்தேன். என் மகளை நினைத்து இப்போது வாழ்ந்து வருகிறேன் என்று உருக்கமாக பேசியுள்ளார் நடிகை கவிதா.