57 வயது நடிகருக்கு ஜோடியாக கயாடு லோஹர், ஹிட் அடித்ததுமே இப்படியா
Tamil Actress
Kayadu Lohar
By Tony
கயாடு லோஹர்
ட்ராகன் படத்தின் மூலம் ரசிகர்கள் மனதை கொள்ளைக்கொண்டவர் கயாடு லோஹர். இதை தொடர்ந்து இவர் தென்னிந்திய சினிமா ரசிகர்களின் கிர்ஷ்-ஆக மாறிவிட்டார்.
எங்கு திரும்பினாலும் சமூக வலைத்தளத்தில் கயாடு எடிட் தான் தற்போது உலா வந்துக்கொண்டு இருக்கின்றது.
இந்நிலையில் கயாடு அடுத்து யாருடன் ஜோடி போடுவார் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வியாக இருந்து வந்தது.
தற்போது இவர் தெலுங்கு நடிகர் ரவிடேஜா நடிக்கும் ஒரு படத்தில் ஹீரோயினாக கமிட் ஆகியுள்ளதாக ஒரு தகவல் கசிந்துள்ளது.
அதோடு ரவிதேஜாவிற்கு 57 வயது என்பது குறிப்பிடத்தக்கது. இதை அறிந்த பலரும், ஏன்மா இப்பத்தானே ஹிட் கொடுத்தீங்க, அதற்குள் ஏன் சீனியர் ஹீரோக்கு ஜோடி என கேட்கின்றனர்.