இம்மார்ட்டல் பட பிரமோஷனுக்கு வராததுக்கு இதான் காரணம்!! கயாடு லோஹர் விளக்கம்...
கயாடு லோஹர்
துல்கர் சல்மானுக்கு ஜோடியாக ஐ ஆம் கேம் பட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட நடிகை கயாடு லோஹர், தமிழில் வெளியான இம்மார்ட்டல் பட பிரமோஷனை புறக்கணித்தார்.
தமிழில் டிராகனுக்கு முன் நடித்த படம் இம்மார்ட்டல், அப்படி அதை ஏன் புறக்கணித்தார். சம்பள பிரச்சனையா? இல்லை ஈகோ பிரச்சனையா? என்ற கேள்வியும் எழுந்து வருகிறது.

அவர் மீது இம்மார்ட்டல் படகுழு கடும் கோபத்தில் இருக்கிறதாம். ஐ ஆம் கேம் படத்தின் செகண்ட் ஆஃப் பெரிய வரவேற்பு கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
தற்போது இம்மார்ட்டல் பட பிரமோஷனில் கலந்து கொள்ளாததற்கான காரணத்தை கயாடு லோஹர் தெரிவித்துள்ளார்.
இதான் காரணம்
அதில், அடுத்தடுத்து தொடர்ச்சியாக படங்களின் ஷூட்டிங்கில் இருந்ததால், பிரமோஷன்களில் கலந்து கொள்ள நேரமில்லை. படத்தின் விளம்பரப் பணிகளுக்காக என் வசம் ஒரேவொரு நாள் மட்டுமே இருந்தது.

அன்று ஐ ஆம் கேம் பட நிகழ்ச்சியில் பங்கேற்றேன். இம்மார்ட்டல் படக்குழுவால் அந்த தேதியில் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ய முடியவில்லை. நான் நடிக்கும் எல்லா படங்களுமே எனக்கு முக்கியம்தான். எந்த படங்களையும் பெரிய படம், சிறிய படம் என்று நான் பிரித்து பார்ப்பதில்லை.
அதனால் அதை வைத்து யாரும் தேவையில்லாத சர்ச்சையை ஏற்படுர்த்த வேண்டாம். சோசியல் மீடியாக்களில் வரும் வதந்திகளை, விமர்சனங்களை நான் பெரிதாக எடுத்துக்கொள்வதில்லை என்று கயாடு லோஹர் கூறியிருக்கிறார்.