எப்ப பார்த்தாலும் என் உடம்ப பத்தி அப்படி மோசமா பேசுவாங்க...நடிகை கீர்த்தி பாண்டியன் வெளிப்படை

Ashok Selvan Actors Tamil Actors Actress Keerthi Pandian
By Dhiviyarajan Dec 08, 2023 11:50 AM GMT
Report

தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவர் அசோக் செல்வன். இவர் நடிகர் அருண் பாண்டியன் மகள் கீர்த்தி பாண்டியனை காதலித்து சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார்.

இவர்களின் திருமணத்திற்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்தனர். ஆனால் சிலர், கீர்த்தி பாண்டியன் அழகா இல்ல என்று உடல் தோற்றத்தை வைத்து கிண்டல் செய்தனர்.

எப்ப பார்த்தாலும் என் உடம்ப பத்தி அப்படி மோசமா பேசுவாங்க...நடிகை கீர்த்தி பாண்டியன் வெளிப்படை | Keerthi Pandian React To Body Shaming

இந்நிலையில் கீர்த்தி பாண்டியன் கலந்துகொண்ட பேட்டியில், 'உங்களுக்கு வரும் மோசமான கமெண்ட்களை எவ்வாறு பார்க்கிறீர்கள்?' என்று கேள்வி எழுப்பினார்கள்.

இதற்கு பதில் அளித்த கீர்த்தி பாண்டியன், 'சிறு வயதில் இருந்தே நிறைய இந்த மாதிரியான சம்பவங்களை எதிர்கொண்டு இருக்கிறேன். நான் நீண்ட காலமாக குள்ளமாக, ஒல்லியாக இருந்தேன். இன்னொன்று, நான் மிகவும் கருப்பாக இருந்தேன். அதற்கு காரணம் நான் அதிகமாக வெயிலில் சுற்றி கொண்டு இருப்பேன்'.

'அப்போது எல்லாம் என்னுடைய தோற்றத்தை குறித்து வரும் மோசமான கமெண்ட் கேட்டவுடன் வீட்டிற்கு சென்று அழுவேன். ஆனால் அதை பற்றி இப்போது யோசித்தால் நான் அந்த காலத்திற்கு சென்று நன்றி சொல்ல நினைக்கிறேன்' என்று கூறியுள்ளார்.