குடிகாரன் என் மேல் சாய்ந்து என்ன.. கசப்பான அனுபவத்தை சொன்ன கீர்த்தி சுரேஷ்
தமிழ் சினிமாவில் இது என்ன மாயம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை கீர்த்தி சுரேஷ். இதனை அடுத்த ரஜினி விஜய், சூர்யா, தனுஷ் எனப் பல முன்னணி ஹீரோக்கள் படங்களில் நடித்துள்ளார்.
தெலுங்கில் இவர் நடித்த மகாநதி படத்துக்கு சிறந்த நடிகைக்கான தேசிய விருதைப் பெற்றார். தற்போது கீர்த்தி பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற கீர்த்தி சுரேஷ், தனது வாழ்க்கையில் கசப்பான அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர்,நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த போது நானும் என்னுடைய தோழியும் ரோட்டில் நடந்து சென்று கொண்டு இருந்தோம்.
அந்த சமயத்தில் குடிகாரன் என் மீது சாய்ந்தான். அப்போதே அந்த நபர் கன்னத்தில் பளார் என்று அடித்துவிட்டு வந்துவிட்டேன் என்று கீர்த்தி சுரேஷ் பேசியுள்ளார்.